PM Modi Meet TN BJP MLAs In HIs House Delhi: தமிழகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் இன்று (ஜூலை 3) பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில், சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பல ஆண்டகளுக்கு பிறகு பாஜக தமிழக சட்டசபையில் இடம்பிடித்துள்ளது. இதில் எம் ஆர் காந்தி (நாகர்கோயில்), நைனார் நாகேந்திரன் (திருநெல்வேலி), சி சரஸ்வதி (மொடகுரிச்சி), வனதி சீனிவாசன் (கோயம்புத்தூர் தெற்கு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார். இந்த சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏக்கள் மாநிலத்தில் தேவையான வளர்ச்சி குறித்து பிரதமரின் கவனத்தை கொண்டு வந்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த சந்திப்பு தமிழகத்தில் நீர் பாதுகாப்பு குறித்து அதிகம் ஆலோசிக்கப்பட்டதாகவும்,கொரோனா தடுப்பூசி போடுவது, நதிநீர் இணைப்பு மற்றும் சுற்றுலா தளங்கள் மேம்பாடு குறித்து பிரதமரிடம் பேசியதாகவும் குறிப்பிட்ட அவர், பாஜக எப்போதும் தமிழகத்தை ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும்"மாமல்லபுரம், தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த உதவுமாறு நாங்கள் பிரதமரிடம் கேட்டுக் கொண்டோம். விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாங்கள் பிரதமரை வலியுறுத்தியுள்ளோம் நீர் பாதுகாப்பு மற்றும் நதிநீர் இணைப்பு பற்றியும், காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளுக்காக பாஜக தொடர்ந்து பேசும் எனறும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தகூட்டத்திற்கு முன்பு, பாஜக எம்.எல்.ஏ வனதி சீனிவாசன், “இந்த சந்திப்பு பிரதமரின் ஆதரவு எப்போதும் நம் மாநிலத்திற்கு இருக்கும் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிப்படுத்த உதவும்” என கூறினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil