/tamil-ie/media/media_files/uploads/2023/09/PM-Modi-meets-chess-prodigy-Praggnanandhaa.jpg)
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா
FIDE உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்த 18 வயது சதுரங்க வீரரான பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்தார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “இன்று உங்களை உங்கள் குடும்பத்தினருடன் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள்.
Had very special visitors at 7, LKM today.
— Narendra Modi (@narendramodi) August 31, 2023
Delighted to meet you, @rpragchess along with your family.
You personify passion and perseverance. Your example shows how India's youth can conquer any domain. Proud of you! https://t.co/r40ahCwgph
உங்கள் உதாரணம் இந்திய இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, பிரதமருக்கு பிரக்ஞானந்தா நன்றி தெரிவித்தார்.
18 வயதான அவர் ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார், ஆனால் அதே வழியில் வரலாற்றை உருவாக்கினார்.
இது உலக சாம்பியனான டிங் லிரனுக்கு ஒரு சவாலாக இருக்கும் ஒரு நிகழ்வாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.