முதுமலையில் பொம்மன் – பெள்ளி தம்பதியைச் சந்தித்து உரையாடிய மோடி; படங்கள்
ஆஸ்கர் விருது வென்ற ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பாகன் பொம்மன் – பெள்ளி தம்பதியைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார்; படங்கள்
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் பாதுகாப்பு முகாமை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.
அதன்பின்னர், ஆஸ்கர் விருது வென்ற ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பாகன் பொம்மன் – பெள்ளி தம்பதியைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். அவர்கள் வளர்த்து வந்த யானை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டதோடு, அவர்களுடன் சேர்ந்து யானைகளுக்கு உணவளித்தார். மேலும், யானைகள் குறித்தும், யானை வளர்ப்பு, அவர்கள் எத்தனை யானைகள் வளர்த்துள்ளனர், அவர்களின் வாழ்வாதாரம், தினசரி நடவடிக்கைகள் என்ன போன்ற தகவல்களையும் பிரதமர் கேட்டறிந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil