தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட அக்கட்சி சார்பில் நாளை (பிப்.10) மேட்டுப்பாளையம் அருகே பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பிரதமரின் வருகையை ஒட்டி பொதுக் கூட்டம் நடைபெறும் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல பொதுக் கூட்டத்துக்கு பிரம்மாண்ட மேடையுடன் பந்தல் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமரின் வருகைக்காக பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகிலேயே தற்காலிக ஹெலிபேடு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெலிபேடில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரை தரையிறக்கி சோதனை நடத்தப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“