பிரதமர் மோடி, நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு மற்று கேரளாவிற்கு வந்துள்ளார். இதில் நேற்று மாலை அவர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். மேலும் அவர் வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொதுமக்கள் சார்பிலும், தொண்டர்கள் சார்பிலும் பெரும் வரவேற்பு மோடிக்கு வழங்கப்பட்டது. ஈரோடை சேர்ந்த மக்கள், பிரதமர் மோடிக்கு 67 கிலோ மஞ்சள் மாலையை பரிசாக வழங்கினார். தேசிய மஞ்சள் வாரியத்தை அமைத்ததற்கு நன்றி தெரிவித்து, அவர்கள் இதை வழங்கினர்.
தோடா பழங்குடியின மக்கள், கையால் செய்யப்பட்ட சால்வையை பிரதமர் மோடிக்கு வழங்கினர். பிரதமர் மோடிக்கு சால்வை வழங்கியதால், இவர்களது சால்வை வியாபாரம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. காளையின் உருவ பொம்மையும் அவருக்கு வழங்கப்பட்டது. ஜல்லிகட்டை மீட்டு கொடுத்ததால் இது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“