காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், 13 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்ப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
உத்தரபிரதேசத்தின் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு இருந்து வருகிறது. இதை புதுப்பிக்கும் நோக்கில் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் ஒரு மாத காலத்திற்கு காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள்: யூரியா கிடைக்க நடவடிக்கை.. அவுட் சோர்ஸிங் மறுபரிசீலனை.. கே.என். நேரு தகவல்
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாசாரம், ஜவுளி, ரெயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரபிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.
வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம், டிசம்பர் 19 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.,முருகன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளரும், எம்.பி.,யுமான இளையராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இருபிராந்தியங்களில் இருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவவாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் போன்றோர் அறிவு மற்றும் கலச்சாரத்தை பகிர்ந்துக் கொள்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil