Advertisment

'தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு': மீண்டும் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த மோடி

"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது." என்று பிரதமர் மோடி கூறினார்.

author-image
WebDesk
New Update
PM Modi remembers ADMK Jayalalitha in his Salem speech Tamil News

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது மீண்டும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pm Modi Speech | Jeyalalitha: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிய நிலையில், அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 

Advertisment

மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களையும் தொடங்கி விட்டனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று கோவை வந்தார். கோவையில் வாகன பேரணியில் பங்கேற்றார்.

இன்று 2-வது நாளாக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வந்துள்ளார். கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த மோடி, கார் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தார். விழா மேடை வரை திறந்த வாகனம் மூலம் பிரதமர் மோடி வருகை தந்தார். 

பொதுக்கூட்டத்தில் திரண்டு இருந்த பாஜகவினர் மோடியை பார்த்ததும் உற்சாகம் அடைந்து கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மோடி, பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே வாசன், ஏ.சி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது மீண்டும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணியில் இல்லாத நிலையில், ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

சேலை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும். கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்து விட்டார்கள். ஆடிட்டர் ரமேஷ் உள்பட பா.ஜ.க நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது." என்று கூறினார். 

முன்னதாக, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி பா.ஜ.க-வின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய மோடி, "எம்.ஜி.ஆர் போலவே ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார். அவருடன் நெருங்கி பணியாற்றி உள்ளேன். அவருக்கு மீண்டும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்." என்று கூறி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார். 

இருப்பினும், அ.தி.மு.க வாக்குகளை குறிவைத்தே பிரதமர் மோடி அவ்வாறு பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினர் மோடியை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jeyalalitha Pm Modi Speech
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment