/indian-express-tamil/media/media_files/KwPnclOC0elUo1am9ygS.jpg)
எங்கள் தொண்டர்களின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்த்து நான் உணர்ச்சிவசப்படுகிறேன்; சென்னை ஏர்போர்ட்டில் மோடியை நெகிழ வைத்த சந்திப்பு
சென்னையில் பா.ஜ.க தொண்டர் ஒருவர் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பார்க்காமல் பிரதமர் மோடியை வரவேற்கச் வந்தது குறித்து குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு மாதத்தில் 4 ஆவது முறையாக இன்று (மார்ச் 4) தமிழகம் வந்தார். பிரதமர் சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் அதிவேக ஈணுலை திட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்தநிலையில், மோடி தனது தொண்டர் ஒருவர் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலானது.அந்தத் தொண்டர் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைக் கூட பார்க்காமல் மோடியை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
இதனால் நெகிழ்ந்துபோன பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் சிறப்பு வாய்ந்த உரையாடல்!சென்னை விமான நிலையத்தில், எங்கள் காரியகர்த்தாக்களில் (தொண்டர்) ஒருவரான ஸ்ரீ அஸ்வந்த் பிஜாய் ஜி என்னை வரவேற்க வந்து இருந்தார். அவரது மனைவி இன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார், ஆனால் அவர் குழந்தைகளை இன்னும் பார்க்கவில்லை என்று என்னிடம் கூறினார். நான் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்று கூறி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன்.
இவ்வளவு அர்ப்பணிப்பும் விசுவாசமும் கொண்ட தொண்டர்கள் எங்கள் கட்சியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் தொண்டர்களின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்த்து நான் உணர்ச்சிவசப்படுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
A very special interaction!
— Narendra Modi (@narendramodi) March 4, 2024
At Chennai airport, one of our Karyakartas, Shri Aswanth Pijai Ji was there to welcome me. He told me that his wife had just given birth to twins but he hadn’t met them yet. I told him he shouldn’t have come here and also conveyed my blessings to him… pic.twitter.com/4Oywc2cSPE
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.