செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் பழமையான மொழி தமிழ், செஸ் உருவான இடத்திலேயே செஸ் ஒலிம்பியாட் நடக்கிறது. தமிழக அரசு குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது என்று வியாழக்கிழமை கூறினார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கவிழா நடைபெற்றது. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு வெகு சிறப்பாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். தொடக்க விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர விழாவை தொடங்கி வைத்துப் பேசினார். விழாவில் பிரதமர் மோடி பேசியதவாது: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடக்கின்றன. அதுவும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை.” என்று கூறினார்.
கலைநிகழ்ச்சிகள் நடந்து முடிந்த பின், பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பெற்று, இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் ஜோதியை ஏற்றினர்.
செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மிகக்குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிகச்சிறப்பாக செய்துள்ளது. செஸ் போட்டி உருவான தமிழகத்திலேயே செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடப்பது சிறப்பானது. இந்தியா சுதந்திரம் பெற்று 75வது ஆண்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடப்பது சிறப்பானது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எக்காலத்திலும் நினைவில் இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் பல கோவில்கள் மிகவும் பழமையானவை. நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பை. தமிழ்நாட்டில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவில், கடவுளே செஸ் விளையாடியிருப்பதை காட்டுகிறது. உலகின் பழமையானன் மொழி தமிழ் மொழி. செஸ் உருவான இடத்திலேயே செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது” என்று கூறினார்.
பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி நாளை பங்கேற்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.