திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் குண்டூரில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினரும் ஒன்றிய குழு துணை தலைவருமான நவல்பட்டு சண்முகம், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள்
இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக நமது மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். தமிழ்நாட்டின் மகளிர்க்காக திமுக அரசு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயலாற்று வருகிறது. குறிப்பாக மறைந்த தலைவர் கலைஞர் அவர்களை தாண்டி, நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வித்துறை, வேலை வாய்ப்பு ,அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமூக நீதியை கடைப்பிடித்து அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றி வருகிறார்.
மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாட்டில் 1 கோடியே, 18 லட்சம் பேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்போடு முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். மழை, வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் வழங்கியுள்ளார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சேதம் அடைந்த வீடுகளை சீரமைப்பு செய்ய நிதிகள் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது போன்ற மக்களுக்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம் அந்த அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். கலைஞர் இல்லம் என்ற திட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீடு கட்டி தரபட உள்ளது.
மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு, தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றார்கள், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், கருப்பு பணத்தை அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என அறிவித்தார்கள். இது போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை மக்களிடையே வழங்கி எதையும் நிறைவேற்றாத அரசுதான் பாஜக அரசு. மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை, தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சென்று பார்த்து ஆறுதல் கூறவில்லை, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிகளை முறையாக ஒதுக்கீடு செய்யவில்லை, ஆகையால் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர எந்த யோக்கியதையும் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தவர் மோடி. பாஜகவிற்கு வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பு அலைகள் வெளிவரும்.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை, மாறாக அதிக கடன்களை மட்டுமே நிலுவையில் வைத்துவிட்டு சென்றார்கள். அதையும் சமாளித்து, தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துக்கொண்டு செல்பவர்கள் தான் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவார். அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சரமாக இருந்த விஜயகர் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படாது என்று தெரிவித்தார். ஆனால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சியில் உரையாக தடுக்க பணிகளை மேற்கொள்ளாததால் எண்ணற்ற மக்கள் இறந்தார்கள். அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு சென்று சேர்த்தது. அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிறகு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி, முழுமையாக தமிழ்நாட்டில் இருந்து கொரோனாவை விரட்டுவதற்கு திமுக அரசு செயல்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.
தினந்தோறும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி மக்களின் தேவைகளை நன்கு அறிந்து செயல்படக்கூடிய ஒரே முதல்வர் நமது மு.க. ஸ்டாலின் மட்டுமே ஆவார்
தமிழ்நாட்டின் மாநில உரிமையை மீட்டெடுக்க முதல்வர் மு க ஸ்டாலின் அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் துணை நின்று தேர்தலில் வெற்றியை பெற்று தருவோம்" என தெரிவித்தார்.
இந்த விழாவில் முன்னாள் எம்எல்ஏ சேகரன், மாநகர செயலாளர் மதிவாணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர்கள்சண்முகம் கயல்விழி பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.