PM Modi Speech Hanuman Statue In Rameswaram And West Bengal : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள 108 அடி அனுமன் சிலையை இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பிரதமர் மோடி, தெற்கில் ராமேஸ்வரம், மற்றும் மேற்குவங்கத்தில் அனுமன் சிலை நிறுவம் பணி நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் 4 திசைகளிலும் அனுமன் சிலை நிறுவ வேண்டும் என்று முடிவு செய்துள்ள மத்திய அரசு முதல்கட்டமாக வடக்கில் சிம்லாவில் கடந்த 2018-ம் ஆண்டு அனுமன் சிலை நிறுவி பிரம்மாண்டமாக திறக்கப்பட்து. அதனைத் தொடர்ந்து மேற்கில், குஜராத்திலும், கிழக்கில் மேற்கு வங்கத்திலும், தெற்கில் ராமேஷ்வரத்திலும் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் குஜராத் மாநிலத்தில், மோர்பி 108 அடி அனுமன் சிலை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சிலை தொடர்பாக பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அனுமன் ஜெயந்தியான இன்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்த படி காணொலி காட்சி வழியாக இந்த சிலையை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அனைவருக்கும் அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், நல்ல நேரத்தில் அனுமனின் இந்த பிரம்மண்ட சிலை இன்று திறக்கப்பட்டுள்ளது. நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
அனுமன் தனது பக்தி மற்றும் சேவையால், அனைவரையும் இணைக்கிறார். இதனால் அனைவரும் உத்வேகம் பெறுகின்றனர். ஏற்கனவே வடக்கில் சிம்லாவிலும் மேற்கில், குஜராத்திலும் அனுமன்சிலை நிறுவப்பட்டுள்ளது. அடுத்து தெற்கில் ராமேஸ்வரத்திலும், கிழக்கில் மேற்குவங்கத்திலும் அனுமன் சிலை நிறுவப்படும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“