Advertisment

தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை பல மடங்காக திருப்பித் தருவேன்: தூத்துக்குடியில் மோடி வாக்குறுதி

"தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டையும், செய்தித்தாள்களில் தமிழ்நாடு அரசு வெளியிடவிடுவதில்லை" என்று தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
PM Modi speech at Tuticorin Tamil News

"தமிழ்நாட்டின் சாலை வழி இணைப்புகள் சிறப்பாக மாறும்" என்று பிரதமர் மோடி தூத்துக்குடியில் ஆற்றிய தனது உரையில் தெரிவித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pm Modi Speech | Tuticorin: தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றியானார். வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி கூறியது பின்வருமாறு:- 

Advertisment

வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தமிழ்நாட்டின் தூத்துக்குடி எழுதி வருகிறது. திட்டங்களின் தொடக்கம் என்பது அனைவரின் முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கையின் எடுத்துக்காட்டு. இந்த திட்டங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும்.

தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் இந்தியா முழுவதும் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவில் தமிழகம் முக்கிய பங்கு வைத்து வருகிறது. புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மக்களின் சேவகனாக கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன். காங்கிரஸ் ஆட்சி மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறேன்; அவை கசப்பான உண்மைகள். காங்கிரஸ் ஆட்சியின் போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்த நலத்திட்டங்கள் இப்போது நிறைவேறுகின்றன. 

திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் சாலை வழி இணைப்புகள் சிறப்பாக மாற உள்ளன.  தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்பு அதிகரித்துள்ளது.  ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சாலை வழி இணைப்புகள் மேலும் மாறும். இதனால் பயண நேரம் குறையும்.

மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2,000 கி.மீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 5 வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றன. நான் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் கட்சிகளின் சித்தாந்தமே தவிர, எனது தனிப்பட்ட கருத்துகள் கிடையாது. தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவோம்

ஹைட்ரஜன் படகு காசியின் கங்கை ஆற்றில் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் நல்ல உறவு மேலும் உறுதியாக இருக்கிறது. நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  சிறப்பாக மாற உள்ளன. என்னுடைய தொகுதியான காசிக்கு தமிழக மக்கள் அளிக்கும் நன்கொடை இதுவாகும். நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை. தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம்.

தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிகிறார்கள். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை பலமடங்காக திருப்பித் தருவேன். தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன். 3ஆவது முறையாக நான் ஆட்சியமைக்கும்போது உத்தரவாதங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" 

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pm Modi Speech Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment