scorecardresearch

தமிழ் பாரம்பரியத்தால் ஈர்க்கப் பட்டுள்ளேன்; டெல்லி தமிழ் புத்தாண்டு விழாவில் மோடி பேச்சு

உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர்; டெல்லி தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

modi
டெல்லி தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழ் பாரம்பரியத்தால் கவரப்பட்டுள்ளேன் என்று கூறினார்.

தமிழ் புத்தாண்டு உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஆளுனர்கள் தமிழிசை சௌந்தரராஜன், சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்: தமிழர் வாழ்வில் வளங்களும் நலங்களும் பெருகட்டும்: தமிழிசை, இ.பி.எஸ், ராமதாஸ் வாழ்த்து

இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனத் தொடங்கினார். ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றுள் தமிழ்நாட்டில் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றி விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கிராம சபை உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை, தகுதி நீக்கம் செய்யும் முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர். தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கியிருக்கிறது. சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் தம்முடன் சுமந்து சென்ற தமிழ் மக்களைக் காணலாம். பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன.

தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உண்மையிலேயே அற்புதமானது. இதுதான் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் மிகவும் சிறப்பாக்குகிறது. அதனால் தான் நான் எப்போதும் தமிழ் பாரம்பரியத்தால் கவரப்பட்டுள்ளேன்.

பல சாதனை செய்த தமிழர்கள் பற்றி பலமுறை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி உள்ளேன். ஐக்கிய நாடுகளை சபையில் தமிழ் மொழியைப் பற்றி பேசியுள்ளேன். தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. ராஜாஜி, காமராஜ் உள்ளிட்ட தலைவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மோடி உரையாற்றினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pm modi speech highlights at delhi tamil new year celebration

Best of Express