சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களைப் பத்திரமாக வெளியயேற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வருவோர் 2 நாள் கழித்து வருமாறு மக்களுக்கு மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினேன். மழை நிலவரம், பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். அனைவரது நலம் மற்றும் பாதுகாப்புக்காகப் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
Spoke to Tamil Nadu CM, Thiru @mkstalin and discussed the situation in the wake of heavy rainfall in parts of the state. Assured all possible support from the Centre in rescue and relief work. I pray for everyone’s well-being and safety.
— Narendra Modi (@narendramodi) November 7, 2021
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், பல இடங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.