/indian-express-tamil/media/media_files/2025/07/27/gw2tdn4b0aahkyj-2025-07-27-15-38-49.jpg)
PM Modi in Tamil Nadu Today Updates: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக (நேற்று)ஜூலை 26 தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். மாலத் தீவிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் எல்.முருகன், ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து தூத்துக்குடியில் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் வழித்தட பணி, மதுரை-போடிநாயக்கனூர் ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம், கூடங்குளம் யூனிட் 3, 4-ல் மின்சாரம் எடுப்பதற்கான மின்பகிர்மான அமைப்பு தொடக்கம், ரூ.283 கோடி மதிப்பிலான ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நெல்லை-மேலப்பாளையம் இருவழிப்பாதை திட்டம், சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டம், வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.285 கோடியில் 3-வது வடக்கு சரக்கு தளவாட நிலையம் திறப்பு, நாகர்கோவில் நகரம்-சந்திப்பு-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை திட்டம், ரூ.1,030 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் உள்பட தமிழகத்தில் நிறைவுற்ற ரூ..4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 27) திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றடைந்தார். அங்கு நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- Jul 27, 2025 16:50 ISTதிருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட மோடி2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இன்று காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றார். அங்கு நடைபெற்ற மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா முடிந்து அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் திருச்சி கிளம்பினார். இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் தலைநகர் டெல்லி புறப்பட்டார். 
- Jul 27, 2025 16:11 ISTகங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து திருச்சி புறப்பட்டார் மோடிகங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி. கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடைபெற்றது. கோயிலில் சிவாச்சாரியார்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பிரசாதத்தை வழங்கினர். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் வந்த மோடிக்கு ஓதுவார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். 
- Jul 27, 2025 15:53 ISTராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் - மோடிதமிழ்நாட்டில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார் 
- Jul 27, 2025 15:45 ISTசோழர் ஆட்சிக் காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடந்தன- மோடிசோழர் ஆட்சிக் காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடந்தன. பிரிட்டனுக்கு முன்பே குடவோலை முறைப்படி ஜனநாயக அடிப்படையில் தேர்தல்கள் நடந்தன என கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார் 
- Jul 27, 2025 15:34 ISTஇளையராஜாவின் இசையாலும், ஓதுவார்களின் பாடல்களாலும் ஆனந்தம் அடைந்தேன் - மோடிசிவ முழக்கத்தை கேட்கும் போது பரவசமாக உள்ளது; இளையராஜாவின் இசையாலும், ஓதுவார்களின் பாடல்களாலும் ஆனந்தமடைந்தேன் என கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார் 
- Jul 27, 2025 15:28 ISTஅன்பே சிவம் என்ற கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் பிரச்னையே இருக்காது - மோடிஅன்பே சிவம் என்ற கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் பிரச்னையே இருக்காது என கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி பேசினார் 
- Jul 27, 2025 15:27 ISTதிருவாசகம் கூறிய மோடி"நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க.. "நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க.. இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என பிரதமர் மோடி தனது பேச்சில் திருவாசகத்தை குறிப்பிட்டார் 
- Jul 27, 2025 14:59 IST'வணக்கம் சோழநாடு’ எனக் கூறி பேச்சைத் தொடங்கிய மோடிகங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி 'வணக்கம் சோழநாடு’ எனக் கூறி பேச்சைத் தொடங்கினார் 
- Jul 27, 2025 14:41 ISTராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடிகங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார் 
- Jul 27, 2025 14:08 ISTபிரதமர் மோடிக்கு வீணை ஓவியம் பரிசளிப்புகங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வீணை ஓவியத்தை பரிசளித்தார். 
- Jul 27, 2025 14:04 ISTதேவாரம் பாடி மோடிக்கு வரவேற்புஇன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரம் வருகை தந்த பிரதமர் மோடி, அங்கு சோழீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இந்நிலையில், 40 ஓதுவார்கள் தேவாரம் பாடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
- Jul 27, 2025 13:34 ISTதீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்திய மோடிகங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கும் சோழீஸ்வரர் கோயிலில், பிரதமர் மோடி தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தினார். 
- Jul 27, 2025 13:28 ISTசிற்பங்கள், புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மோடிகங்கைகொண்ட சோழபும் சோழீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். 
- Jul 27, 2025 13:24 ISTமோடி வருகையால் கங்கைகொண்ட சோழபுரத்தின் பெருமை அதிகரிக்கும் - அண்ணாமலைபிரதமர் மோடியின் வருகையால், கங்கைகொண்ட சோழபுரத்திற்கான பெருமை அதிகரிக்கும் என்று முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கான அரசு முறை பயணத்தை முடித்து விட்டு, நேரடியாக பிரதமர் மோடி இங்கு வருகை தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
- Jul 27, 2025 13:20 ISTமோடி பங்கேற்கும் நிகழ்வில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று அரசு சார்பில் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்த இளையராஜா, அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். Gangai Konda Cholapuram pic.twitter.com/qScvj6GPNx — Ilaiyaraaja (@ilaiyaraaja) July 27, 2025
- Jul 27, 2025 13:14 ISTதமிழர் பாரம்பரிய உடையணிந்து மோடி வருகைகங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வருகை தந்தார். குறிப்பாக, முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளும் அவர், தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து வருகை தந்தார். 
- Jul 27, 2025 13:05 ISTகங்கைகொண்ட சோழபுரத்தில் மோடியின் ரோடு ஷோகங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த மோடி, அங்கு ரோடு ஷோ நடத்தினார். அந்த வகையில், காரின் படியில் நின்றபடி சாலையின் இருபுறமும் இருந்த மக்களுக்கு அவர் கையசைத்துச் சென்றார். கங்கைகொண்ட சோழபுரத்தில் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி#RajendraChola | #RajendraCholan | #GangaikondaCholapuram | #AadiThiruvathiraiFestival | #Ariyalur | #Thanjavur | #PMModi | #NarendraModipic.twitter.com/0uuZGkBEFv — PttvOnlinenews (@PttvNewsX) July 27, 2025
- Jul 27, 2025 12:41 ISTகங்கை கொண்ட சோழபுரம் வந்தடைந்த மோடிதிருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
- Jul 27, 2025 11:52 ISTகங்கை கொண்ட சோழபுரம் நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடிதிருச்சி தனியார் விடுதியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி, வழிநெடுகிலும் அவரைக் காண குவிந்துள்ள தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார். 
- Jul 27, 2025 09:56 ISTகீழடி அறிக்கை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை பிரதமரே? - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்கடந்த ஆண்டு தூத்துக்குடி முத்துகளை பிஸ்கேட்ஸ்க்கு பரிசாக தந்ததாக மோடி கூறினார். நாட்டிலேயே 3000 ஆண்டுகளுக்கு முந்தைய முத்துகள் அகழாய்வில் கிடைத்தது கீழடியில் மட்டும்தான்; வரலாற்றின் முத்தான கீழடி அறிக்கை மட்டும் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை பிரதமரே? என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கூறினார். 
- Jul 27, 2025 09:40 ISTபிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? - சேகர்பாபு விளக்கம்தமிழகம் வரும் பிரதமரை விருந்தோம்பலுடன் வரவேற்பது எங்கள் பண்பாடு. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். 
- Jul 27, 2025 09:20 ISTகங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார் மோடிகங்கை கொண்ட சோழபுரத்தில் இன்று (ஜூலை 27) நடைபெற இருக்கும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். திருச்சியில் இருந்து இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மோடி செல்கிறார். 
- Jul 27, 2025 08:55 ISTவளர்ச்சித் திட்டப் பணிகள் - பிரதமருக்கு மனுதமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மனு அளித்துள்ளார். சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151 கோடி நிதியை விடுவிக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும், கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் உருக்காலையின் மிகை நிலங்களை பாதுகாப்பு தொழிற்பூங்காவிற்கு வழங்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
- Jul 27, 2025 08:46 ISTகல்வி நிதியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை2024-25 ஆம் ஆண்டிற்கான நிலுவையில் உள்ள ரூ. 2151 கோடி பங்கை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். ஒன்றிய அரசு நிதி வழங்காமல் இருப்பது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அளித்த கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். 
- Jul 27, 2025 08:26 ISTபாதுகாப்பு பணிகள் தீவிரம்திருச்சியில் பாதுகாப்பு பணியில் பிரதமர் மோடியின் மத்திய சிறப்பு பாதுகாப்பு குழுவினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
- Jul 27, 2025 08:01 ISTராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியீடுகங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். 
- Jul 27, 2025 07:55 ISTமோடி ரோடு ஷோதிருச்சியில் சொகுசு விடுதியில் இருந்து கிளம்பும் மோடி கன்டோன்மென்ட், ஒத்தக்கடை, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு சோ நடத்துகிறார். இதற்காக காலை 8 மணி முதல் பாஜக பிரமுகர்கள் சாலையின் இருபுறமும் குவிய பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
- Jul 27, 2025 07:55 ISTதயார் நிலையில் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்பிரதமர் மோடி இன்று காலை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒரு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி பயணிப்பார் என்று கூறப்படுகிறது. 
- Jul 27, 2025 07:54 ISTஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்கும் மோடிகங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ராஜேந்திர சோழன் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பும் பிரதமர் மோடி, திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். 
- Jul 27, 2025 07:53 ISTகாலை 11 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் மோடிபிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மாரியாட் சொகுசு விடுதியில் தங்கினார். இன்று காலை 11 மணிக்கு கோர்ட்யார்ட் மாரியாட் ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகண்டசோழபுரம் செல்கிறார். 
- Jul 27, 2025 07:52 ISTமோடியை வரவேற்ற அமைச்சர்கள்தூத்துக்குடியில் நேற்று இரவு ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இரவு 10 மணிக்கு திருச்சி வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி. 
 திருச்சி விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு,அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.காமராஜ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், துரை வைகோ எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- Jul 27, 2025 07:51 ISTதிருச்சி வந்த மோடிகங்கைகொண்டசோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு தூத்துக்குடியில் இருந்து திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளும் கட்சியான திமுக சார்பில் அமைச்சர் கே என் நேரு, தங்கம் தென்னரசு, மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். 
- Jul 27, 2025 07:34 ISTமுப்பெரும் விழாவில் பங்கேற்கும் மோடிகங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். 
- Jul 27, 2025 07:33 ISTகாலை 11 மணிக்கு மோடி வருகைஅரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்க தயார் நிலையில் இறங்கு தளம் உள்ளது. திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
- Jul 26, 2025 22:23 ISTதூத்துக்குடியில் இருந்து திருச்சி வந்தடைந்தார் மோடிதூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி. பிரதமரை வரவேற்க அமைச்சர் கே.என்.நேரு, எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். 
- Jul 26, 2025 21:06 ISTதமிழ்நாட்டின் தனித்துவங்கள் - மோடி பெருமிதம்தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. தேசத்தின் நீண்ட கடல் பாலம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்று வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். 
- Jul 26, 2025 21:02 ISTதமிழ்நாட்டிற்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு - மோடிகடந்த காங்கிரஸ் ஆட்சியை விட தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி கூறி உள்ளார். தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மோடி கூறினார். 
- Jul 26, 2025 20:52 ISTஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சி. - மோடிவ.உ.சி.யின் தொலைநோக்கு போற்றுதலுக்குரியது; கடலில் சுதேசி கப்பல்களை விட்டு ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சி. என்று தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள்; பயங்கரவாதிகளின் கட்டமைப்பை அழித்ததில் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரித்த ஆயுதங்கள் பெரும் பங்களித்தன என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். 
- Jul 26, 2025 20:44 ISTதென் தமிழக தொழில் வளர்ச்சி பெருகும்: ராம் மோகன்தமிழ்நாட்டுக்கு வளர்ச்சியையும், மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி என ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டங்களுடன் பிரதமர் மோடி வந்துள்ளார். சுற்றுலா, பொருளாதாரத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி விமான நிலையம் அமைகிறது. தூத்துக்குடி விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தால் பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும். தூத்துக்குடி விமான நிலையத்தால் தென் தமிழக தொழில் வளர்ச்சி பெருகும். சுற்றுலா, பொருளாதாரத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி விமான நிலையம் அமைகிறது. 
- Jul 26, 2025 20:38 ISTபிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய திட்டங்கள் என்னென்ன?தூத்துக்குடியில் ரூ.550 கோடி மதிப்பிலான திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் வழித்தட பணி, மதுரை-போடிநாயக்கனூர் ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம், கூடங்குளம் யூனிட் 3, 4-ல் மின்சாரம் எடுப்பதற்கான மின்பகிர்மான அமைப்பு தொடக்கம், ரூ.283 கோடி மதிப்பிலான ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நெல்லை-மேலப்பாளைய்ம் இருவழிப்பாதை திட்டம், சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டம், வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.285 கோடியில் 3-வது வடக்கு சரக்கு தளவாட நிலையம் திறப்பு, நாகர்கோவில் நகரம்-சந்திப்பு-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை திட்டம், ரூ.1,030 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் உள்பட தமிழகத்தில் நிறைவுற்ற ரூ..4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 
- Jul 26, 2025 20:35 IST”இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை அதிகரிப்பு”இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகின்றது என்று பிரதமர் மோடி கூறினார். தூத்துக்குடியின் முத்துகளை பில்கேட்சுக்கு பரிசளித்தேன், அது அவருக்கு மிகவும் பிடித்தது. நாட்டின் அடையாளமாக தூத்துக்குடியின் முத்துகள் திகழ்ந்தன. விமான முனையம், துறைமுகம், உட்கட்டமைப்பு ஆகியவற்றின் முக்கிய திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன என்று மோடி குறிப்பிட்டார். 
- Jul 26, 2025 20:29 ISTவளர்ந்த பாரதம், வளர்ந்த தமிழ்நாடே இலக்கு - மோடிவளர்ச்சியடைந்த பாரதத்தையும், வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தூத்துக்குடியில், ரூ.4,900 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கிவைத்து பின் பேசிய அவர், தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பயணம் 2014-ல் தொடங்கியதாகத் தெரிவித்தார். உட்கட்டமைப்பு, எரிசக்தி, ஆகியவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு போன்றவை என்றும் மோடி குறிப்பிட்டார். 
- Jul 26, 2025 20:20 ISTவணக்கம் எனக் கூறி தமிழில் உரையைத் தொடங்கிய மோடிதூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில், ரூ.4,900 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கிவைத்து வணக்கம் எனக் கூறி தமிழில் உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. 
- Jul 26, 2025 20:15 ISTதூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் திறப்புதூத்துக்குடியில் நடந்த விழாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்து, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். 
- Jul 26, 2025 20:09 IST”வளர்ச்சியையும் மாற்றங்களையும் கொண்டுவந்த மோடி”தமிழ்நாட்டிற்கு வளர்ச்சியையும், மாற்றங்களையும் பிரதமர் மோடி கொண்டுவந்திருப்பதாக தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையம், திருச்சி விமான நிலையம் ஏற்கனவே மத்திய அரசால் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும், புதிய விமான நிலையத்தின் முனையம் மூலம் தூத்துக்குடி மேலும் வளர்ச்சியடையும் என்றும் என்று ராம் மோகன் கூறினார். 
- Jul 26, 2025 19:54 IST2 நாள் பயணமாக தமிழகம் வந்தார் பிரதமர் மோடிமாலத்தீவில் இருந்து 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் முருகன், ராம் மோகன் நாயுடு, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து தூத்துக்குடியில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து பிரதமர் பேசுகிறார். பின்னர், இரவு 9.40-க்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். 
- Jul 26, 2025 19:49 ISTமாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் மோடிமாலத்தீவில் மேற்கொண்ட 2 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து தனி விமானத்தில் தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் மோடி. பிரதமரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. மற்றும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் தமிழகத்திற்கான 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து நாளைக்கு திருச்சிக்கு சென்று தங்குகிறார். பின்னர் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கோவிலை பார்வையிட்டு கலை, கலாசார விழாவில் கலந்து கொள்கிறார். 
- Jul 26, 2025 19:33 ISTபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கனிமொழிதென் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்திட வேண்டி, 17 ஆண்டுகளாக தி.மு.க மத்திய அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்திருகிறது. 2008-ல் தலைவர் கலைஞர் அவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டு, விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்கு 712.43 ஏக்கர் நிலமானது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கப்பட்டுள்ளது. நான் 2012-ல் எழுத்து பூர்வமாகவும், 2017 மற்றும் 2024 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதத்தின்போதும் கோரிக்கையை முன்வைத்ததோடு, 2019 மற்றும் 2021-ல் ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினேன். எத்தனையோ ஆண்டுகளாக நாம் வைத்த பல்வேறு கோரிக்கைகளின் பலனாக, இன்று தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தூத்துக்குடி மக்களின் சார்பாக பிரதமர் மோடி மற்றும் அனைத்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறி உள்ளார். 
- Jul 26, 2025 19:32 ISTபிரதமரை வரவேற்க சேலத்திலிருந்து திருச்சி புறப்பட்ட இபிஎஸ்தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க சேலத்திலிருந்து திருச்சி புறப்பட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மாலத்தீவில் மேற்கொண்ட 2 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து தூத்துக்குடிக்கு இன்று தனி விமானத்தில் பிரதமர் மோடி புறப்பட்டார். அவர் இன்றிரவு 8 மணியளவில், தூத்துக்குடி வருகை தருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. மற்றும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. 
- Jul 26, 2025 19:30 IST”ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுவது பாக்கியம்”மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக் காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27 அன்று வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி எக்ஸ்தளத்தில் தமிழில் குறிப்பிட்டுள்ளார். 
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us