/tamil-ie/media/media_files/uploads/2022/04/PM-Modi.jpg)
PM Modi Thanaks To Ilayaraja : அம்பேத்கர் அன்ட் மோடி என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய எழுதிய இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இளையராஜா, 'புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' வெளியிட்டுள்ள அம்பேத்கர் அன்ட் மோடி என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார். கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் உள்ள முன்னுரை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதில் இசையமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரின் கொள்கைகளை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். மோடியின் திட்டங்கள் மூலமாக பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அம்பேத்கர் நிச்சயம் பெருமைப்படுவார் என்றும், பிரதமர் மோடி அம்பேத்கருக்கு நிகரானவர் என்று ஒப்பிட்டு எழுதியிருந்தார்.
அவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் இந்த கருத்தக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் இளையராஜாவுக்கு ஆதரவாக தங்களது கருத்தை தெரிவித்து வருகினறனர்.
இது தொடர்பான சர்ச்சை இன்னும் நீண்டுகொண்டு செல்லும் நிலையில், அம்பேத்கரும் மோடியும் புத்தகத்தில் முன்னுரை எழுதியதைற்காக பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலில், தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி என்று இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கூறியதாக கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி குறித்து புகழ்ந்து முன்னுரை எழுதிய இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க பாஜக சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.