பிரதமர் மோடி கர்நாடகாவின் கலபுரகி பகுதிக்கும், தமிழகத்தின் காஞ்சிபுரம் பகுதிக்கும் நாளை (மார்ச் 6) சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
கர்நாடகாவில் ஆற்றல், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, தமிழகத்தில் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் ஆற்றல் தொடர்பான திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
சாலை போக்குவரத்துத் திட்டம்:
விக்ரவாண்டி - சேத்தியாத்தோப்பு, சேத்தியாத்தோப்பு - சோழபுரம் இடையேயான நான்கு வழிச்சாலை மற்றும் சோழபுரம் - தஞ்சாவூர் இடையேயான NH-45C திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தவிர, கரைபேட்டை - வாலாஜாபாத் இடையேயான NH-4 சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
NH-234 சாலையை விரிவாக்கம் செய்வதற்கும் பாலங்களை வலுப்படுத்தும் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், NH-381ன் அவினாசி - திருப்பூர் - அவினாசிபாளையம் இடையேயான நான்கு வழிச்சாலை பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ரயில்வே பாதை
மின்மயமாக்கப்பட்ட ஈரோடு-கரூர்-திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம்-கரூர்-திண்டுக்கல் பகுதி ரயில் வழித்தடங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
ஆற்றல்
எண்ணூர் LNG ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு தேவையான LNG வாயுக்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
இவற்றைத் தவிர, சென்னையில் உள்ள டாக்டர்.எம்ஜிஆர் பெண்கள் கலை மற்றும் கல்லூரியில், எம்.ஜி.ஆரின் சிலையை, வீடியோ மூலம் பிரதமர் திறந்து வைக்கிறார்.