/tamil-ie/media/media_files/uploads/2018/08/modi-delhi-ie.jpg)
Narendra Modi Visits ISRO
வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்சென்னை ஆகிய 4 மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று உரையாற்றினார்.
இந்த காணொளி கூட்டத்தில், வாக்குச்சாவடி வரை பாஜக சிறப்பாக செயல்பட வேண்டும் என புதுச்சேரி பாஜக நிர்வாகிகளுடன் காணொளியில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுச்சேரி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் மோடி கலைந்துரையாடி வருகிறார்.
மோடி உரை:
மாலை 4.30க்கு நடைபெறும் இந்த உரையாடலில் 4 மாவட்ட பாஜக ஓட்டுசாவடி முகவர்களும் கலந்துக் கொண்டனர்.
இதுக்குறித்து பாஜக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் “19.12.18 அன்று மாலை 4.30 மணிக்கு வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்சென்னை ஆகிய 4 மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
இந்த உரையாடலில் பாஜக ஓட்டுசாவடி முகவர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் பாரதப்பிரதமர் திரு.@narendramodi அவர்கள் வேலூர்,காஞ்சிபுரம்,விழுப்புரம், தென் சென்னை, ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகளின் பிரதிநிதிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடுகிறார்.#MeraBoothSabseMazboot@NamoApp@PMOIndia@AmitShah@AmitShahOffice@santhoshbjp@BJP4India@BJP4TamilNadupic.twitter.com/YznqKhi1bG
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 18 December 2018
மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில் மோடி தமிழக பாஜக பிரமுகர்களுடன் உரையாற்றுவது தேர்தல் குறித்து திட்டமிடுதல் என உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்திருப்பது அக்கட்சியினரை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
மோடி அலை ஓய்ந்து விட்டதாக தொடர்ந்து பேச்சுகள் நிலவி வருகின்றன. இந்த நேரத்தில் தமிழகத்திலும் இதே நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே மோடியின் இந்த சிறப்பு உரையாற்றல் நடத்தப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.