Advertisment

மோடி கோவை வருகை: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் ஆய்வு

பிரதமர் இன்று கோவை வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
pm modi visit Coimbatore Police investigate Bomb threat to Alvernia Matric high School Ramanathapuram  Tamil News

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pm Modi visit coimbotore | கோவை ராமநாதபுரம் பகுதியில் அல்வேனியா என்கிற தனியார் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு இன்று மதியம் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளி நிர்வாகத்தின் இமெயில் குறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Advertisment

அப்போது வேறொரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், இந்த பள்ளியின் பெயர் இமெயிலில் டேக் செய்துள்ளதாகவும், ஆனால் இங்குள்ள பள்ளிக்கு மெயில் வரவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என செய்தி வெளியாகியதால், பெற்றோர்கள் பள்ளியின் முன்பு கூடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் இன்று கோவை வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

coimbotore Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment