Advertisment

திருச்சியில் இன்று மோடி: நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (ஜன.2) திருச்சி வருவதை முன்னிட்டு அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy traffic

Trichy traffic

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (ஜன.2) திருச்சி வருவதை முன்னிட்டு அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை திருச்சி - புதுக்கோட்டை வழியாக வந்து செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் மட்டும் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

(01.01.24)-ஆம் தேதி நேற்றிரவு இரவு முதல் (02.01.24)-ஆம் தேதி மதியம் 03:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட பாரதிதாசன் பல்கலைகழக பட்டமளிப்பு விழா பாதுகாப்பு பணிக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்கள் தலைமையில் 2-காவல்துறை தலைவர்கள், 3-காவல்துறை துணை தலைவர்கள், 8-காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சுமார் 3300 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பாதுகாப்பு பணிக்கு திருச்சி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 18-வெடி குண்டு கண்டறியும் பிரிவினர் மற்றும் மோப்ப நாய் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

ந்த பாதுகாப்பு பணியில் 100 CCTV கேமிராக்கள் திருவளர்சிபட்டியிலிருந்து பாரதிதாசன் பல்கலைகழகம் வரை உள்ள சாலையில் தற்காலிகமாக கம்பத்தில் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு பணிக்கு சத்தியமங்கலம் சிறப்பு பணிக் குழு (STF) வரவழைக்கப்பட்டு பல்கலைகழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

திருச்சி மாநகரத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைகழகம் வரை உள்ள அனைத்து லாட்ஜ், மேன்சன் ஆகியவற்றை தனிப்படை அமைத்து சோதனை செய்தும் மற்றும் உயரமான கட்டிடங்களில் பைனாக்குலர் மூலம் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை, கோவை, சேலம் மற்றும் திருச்சி மாநகரத்திலிருந்து சுப்பிரமணியபுரம், ஏர்போர்ட், மாத்தூர் வழியாக புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் (02.01.2024)-ம் தேதி காலை 0800 மணி முதல் மன்னார்புரம் மேம்பாலம் இடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை - இலுப்பூர் வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கீரனூர், மாத்தூர் வழியாக திருச்சி மாநகரத்திற்கு வரும் வாகனங்கள், சுட்டியாவயல் - இலுப்பூர் - விராலிமலை - மணிகண்டம் வழியாக திருச்சி மாநகரம் மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும்.

விமானநிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் அதற்குண்டனா ஆதாரம் மற்றும் பயண சீட்டை காண்பித்து செல்லலாம். அதுபோல் பல்கலைகழத்தில் பட்டம் வாங்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் பல்கலைகழகத்தால் வழங்கப்பட்ட ஆதராத்தை காண்பிக்கும் பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும், இந்திய பிரதமரை வரவேற்க பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு வருகை தரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் (02.01.2024)-ம் தேதி காலை 08:00 மணி வரை மட்டுமே திருச்சி சாலையில் செல்ல அனுமதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் மேற்கண்ட முக்கிய பிரமுகர் வருகையை முன்னிட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment