PM Modi: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயனமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய - மாநில அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி நேற்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி சென்றார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள பஞ்சக்கரை பகுதிக்கு சென்றார். அங்கிருந்து பிரதமர் மோடி கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார்.
திருச்சி ஸ்ரீரங்க ரெங்கநாதார் கோவிலில் கருடாழ்வார் சன்னிதி, மூலவர் சன்னிதியில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. இதன்பின்னர், கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் பிரதமர் மோடி கம்பர் ராமாயணத்தை கேட்டு ரசித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பிரதமர் மோடி, ராமேஸ்வரம் சென்றார். ராமநாதபுரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். இதன்பின்னர், ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கிருந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலுக்கு சென்ற பிரதமர் மோடி 22 புனித தீர்த்தங்களில் நீராடினினார்.
அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பின் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் பிரதமர் மோடி, கோவில் பிரகாரத்தை வலம் வந்து வழிபாடு மேற்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“