மோடி ஶ்ரீரங்கம் வருகை: தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு

ஸ்ரீரங்கத்தில் இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும், துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை இருக்கும் குப்பை வண்டியிலேயே உணவு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும், துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை இருக்கும் குப்பை வண்டியிலேயே உணவு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
PM Modi visits Srirangam food distributed via truck for sanitation workers Tamil News

ஹெலிபேட்டிற்கு வந்து அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் மோடி.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

க.சண்முகவடிவேல்

Trichy: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயனமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி நேற்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார்.

Advertisment

இந்நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்றவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். 

ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே பஞ்சக்கரையில் ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டிற்கு வந்து அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக ஸ்ரீரங்கத்தில் இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும், துப்புரவு தொழிலாளிகளுக்கு மாநகராட்சி மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு தூய்மை பணியாளருக்கு வழங்கப்படும். ஆனால் அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாக்கடை கழிவுகள் மற்றும் குப்பைகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் மாநகராட்சி குப்பை வண்டியில் வைத்து எடுத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாகனத்தின் உள்ளே குப்பைகள் இருந்த பொழுதும், அதில் உணவுகளை மூடாமல் பாத்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

மாநகர் தூய்மையாக இருக்க வேண்டுமென இரவு பகலாக உழைத்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு இது போன்ற ஒரு அவலமான செயலை மாநகராட்சி ஊழியர்கள் செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இது போன்ற முறையில் உணவுகளை கொண்டு செல்வதை அதிகாரிகள் கவனித்தார்களா, அவர்களுக்கு இது தெரியவில்லையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

தூய்மை இந்தியா பட்டியலில் திருச்சி மாநகராட்சி முதல் இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு இது போன்ற மோசமான முறையை மாநகராட்சி ஊழியர்கள் கையாண்டது பலரது கோபத்திற்கு ஆளாகியுள்ளது. குப்பை இருக்கும் குப்பை வண்டியிலேயே உணவு எடுத்து செல்லும் அவலம் கண்டிக்கத்தக்கது.

தூய்மை பணியாளர்களை அலட்சியமாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவை கொண்டு சென்ற துறையை சார்ந்தவர்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் உடன் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: