Advertisment

தமிழகத்திற்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி.... பயணத் திட்டம் நிகழ்ச்சி நிரல்கள் விவரம்

பிதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை, திருச்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
PM Modi visit

பிதமர் மோடி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை, திருச்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. 

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். 

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில் விரதத்தை தொடங்கிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள ராமர் தொடர்புடைய கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

அதன்படி, மகாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கே வழிபாடு நடத்தினார் இதையடுத்து, பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். 

இதைத் தொடர்ந்து, ஆந்திராவின் லேபஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். 

இதையடுத்து, புதன்கிழமை கேரளா சென்ற பிரதமர் மோடி குருவாயூர் விஷ்ணு கோவிலில் வழிபாடு செய்தார்.

இதைத் தொடர்ந்து, 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் 3 நாட்கள் தங்கி வழிபாடு செய்ய உள்ளார். 

பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் ஜனவரி 19-ம் தேதி மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து, பிரதமர் மோடி அங்கிருந்து நேரு ஸ்டேடியத்திற்கு சென்று அங்கே 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். 

இதையடுத்து, பிரதமர் மோடி சனிக்கிழமை காலை (20.01.2024) திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் செல்கிறார். அதற்காக கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து கார் மூலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து திருச்சி செல்கிறார். அடுத்து, திருச்சியில் இருந்து கார் மூலமாக ஸ்ரீரங்கம் செல்கிறார்.

பிரதமர் மோடி, வைணவ திருப்பதிகளில் முதன்மைத் தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார்.  

அயோத்தியில் ராமர் கோவில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ஸ்ரீரங்கம் கோயிலை பிரதமர் மோடி சுத்தம் செய்கிறார்.  

பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்படுகிறார். பிற்பகல் ராமேஸ்வரத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கே ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றபின், அங்கேயும் சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார்.

பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு (20.01.2024) ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, அங்கே பூஜையில் பங்கேற்கிறார். 

இதையடுத்து, கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அங்கே, பூஜையில் பங்கேற்கிறார்.

ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் பிரதமர் மோடி, புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். 

இதையடுத்து, திங்கள்கிழமை (22.01.2024) அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்லும், பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் சேகரித்த தீர்த்தத்தையும் எடுத்துச் செல்கிறார். 

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் வியாழக்கிழமை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட  ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment