தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் 71வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளத்தில், ” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு, உடல் நலத்தோடு வாழ வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ” அவரது நீண்ட ஆயுளுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். மக்களுக்கு பணியாற்ற அவர் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
"எனது அன்புச் சகோதரரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியாவின் பன்மைத்துவ மற்றும் கூட்டாட்சி யோசனையை வலுப்படுத்த எங்களோடு போராடும் நீங்கள், பல்லாண்டுகளுக்கு நன்றாக இருக்க வேண்டும்" என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“