/tamil-ie/media/media_files/uploads/2023/09/Tharman-and-Modi.jpg)
சிங்கப்பூர் அதிபரான தமிழகத்தைச் சேர்ந்த தர்மனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழரான தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியினரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான தர்மன் சண்முகரத்னம் மற்றும் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்டின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதையும் படியுங்கள்: சிங்கப்பூர் அதிபரான தமிழ் வம்சாவளி: தர்மன் சண்முகரத்னம் கடந்து வந்த பாதை
தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக சிங்கப்பூர் தேர்தல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தர்மன் சண்முகரத்னத்துக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
Hearty congratulations @Tharman_s on your election as the President of Singapore. I look forward to working closely with you to further strengthen the India-Singapore Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) September 2, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.