பிரதமரின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண்ணுக்கு கமல் கட்சியில் பொறுப்பு

மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண் சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மநீமவில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

sneha mohandoss joined in mnm, makkal needhi maiam, மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன், சினேகா மோகன்தாஸ், pm modi's twitter account handled woman sneha mohandoss, kamal haasan, mnm

மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண் சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ள சினேகா மோகன்தாஸ் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். பிதமர் மோடி, இந்த ஆண்டு மகளிர் தினத்தன்று சமூக பணி செய்து கவனம் பெற்ற பெண்களை பெருமைப்படுத்தும் வகையில், அன்று ஒரு நாள் மட்டும் தனது ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் வாய்ப்பை வழங்கினார். அப்போது, ஃபுட்பாங்க் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு மூலம் ஆதரவற்றவர்களுக்காக உணவு வழங்கிய சினேகா மோகன்தாஸ் சேவையை பாராட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் வாய்ப்பை வழங்கினார். பிரதமர் மோடி டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் வாய்ப்பை பெற்றதன் மூலம் சினேகா மோகன்தாஸ் பிரபலமானார்

இந்த நிலையில், சினேகா மோகன்தாஸ் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மையம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவருக்கு சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சினேகா மோகன்தாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும் மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் கமல்ஹாசன் அவளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் மாவட்ட செயலாளர்கள் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறினார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மூன்றாவது அணி அமைக்கும் தகுதி வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm modis twitter account handled woman sneha mohandoss joined in makkal needhi maiam of kamal haasan

Next Story
கேரளா என்கவுண்டரில் தமிழக மாவோயிஸ்ட் இளைஞர் சுட்டுக்கொலைkerala police encounter, tamil andu maoist killedm, மாவோயிஸ்ட், கேரளாவில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை, தமிழக மாவோயிஸ்ட் இளைஞர் பலி, வயநாடு, tamil nadu maoist youth killed, kerala police encounter at wayanad, maoist, kerala, wayanad
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com