PM Narendra Modi | Tamil Nadu | சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி, “வணக்கம் சென்னை” எனக் கூறி ஆங்கிலத்தில் தனது பேச்சை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.
அப்போது அவர், “நான் ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது தமிழர்களால் எனக்கு சக்தி உருவாகிறது. துடிப்பு மிக்க சென்னைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் சென்னை மக்கள் முக்கிய பங்காற்றுவார்கள்.
எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு மிக பழைமையானது. உங்களுக்கும் எனக்குமான உறவு மிக பழமையானது.
ஆனால் நான் சென்னைக்கு வருவது சமீப காலமாக சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. அவர்களுக்கு வயிற்று வலி ஏற்படுகிறது.
இதற்கு காரணம், பாஜக இங்கு வளர்ந்துவருகிறது என்பதால்தான். இதற்கு இங்கு திரண்டிருக்கும் மக்களே சாட்சி” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மோடிக்கு குடும்பம் இல்லை என்கின்றனர். இந்த நாடுதான் எனது குடும்பம். தேசமே சொல்கிறது நாங்கள் மோடியின் குடும்பம், எங்கள் குடும்பம் மோடி என்று.
சிலர் தங்களுக்கு குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திிருட அனுமதிக்க மாட்டோம்” என்றார். முன்னதாக சென்னையில் பாரதிய ஜனதா அரசால் கொண்டுவரப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டம், மெட்ரோ, விமான நிலையம், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் எடுத்துக் கூறினார்.
இந்த நிலையில் திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது என்றார். இதுகுறித்து மோடி, மக்களுக்கு நேரடியாக நிவாரணம் சென்று விடுவதால் திமுகவினருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.
தமிழக வளர்ச்சித் திட்டங்களின் தொகையை கொள்ளையடிக்க முடியாமல் இருப்பதே திமுகவினருக்கு சிக்கலாக உணர்கின்றனர்” என்றார்.
இதையடுத்து சென்னையில் வெள்ளநீர் மேலாண்மையை திமுக அரசு சரிவர செயல்படுத்தவில்லை எனக குற்றஞ்சாட்டினார்.
அப்போது, “புயல் காரணமாக சென்னை மக்கள் துன்பத்தில் இருந்தகனர். அப்போது இங்கு வெள்ளமும் தேனும் ஓடுவதாக திமுக தெரிவித்துக் கொண்டிருந்தது. அதாவது ஊடக மேலாண்மை செய்துக் கொண்டிருந்தனர்” என்றார்.
தொடர்நது, “தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து அச்சம் தெரிவித்த மோடி, “தமிழகத்தில் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது.
போதைப் பொருள் புழக்கத்தால் தமிழக மக்கள் பெரும் கவலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளை அழிக்கும் வகையில் போதைப் பொருள் பழக்கம் உள்ளது. போதைப் பொருள் நாளைய எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்” என்றார்.
மேலும், இண்டி கூட்டணி ஊழலில் திளைத்து காணப்படுகிறது. இந்த இண்டி கூட்டணி ஊழல் தலைவர்களை பொத்தி பொத்தி அடைகாத்து பாதுகாக்கக் கூடிய ஓர் தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதனால் இண்டி கூட்டணி தலைவர்கள் தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு ஊழல் தவிர வேறு ஒன்றும் தெரியாது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“