Advertisment

PM Modi In Tamil Nadu Highlights: 'தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க முற்றிலும் அகற்றப்படும்'- நெல்லையில் மோடி பேச்சு

PM Narendra Modi Tamil Nadu visit Live- 28 February 2024-பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடி, திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறார்.

author-image
WebDesk
New Update
modi

PM Narendra Modi Tamil Nadu visit Live

PM Narendra Modi Tamil Nadu visit Live: பிரதமர் நரேந்திர மோடி 2  நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைப் பயண நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மதுரை சென்றடைந்தார். 

Advertisment

இன்று (பிப்.28) மோடி தூத்துக்குடி, திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறார். தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதள மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 28, 2024 13:46 IST
    மோடியை மீறி இந்தியா மீது யாரும் கை வைக்க முடியாது- நெல்லையில் மோடி பேச்சு 

    நெல்லையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் " மோடியை மீறி இந்தியா மீது யாரும் கை வைக்க முடியாது. தி.மு.க-வை மக்கள் நிராகரிப்பார்கள். தி.மு.க ஒரு குடும்பத்திற்கான கட்சியாக செயல்படுகிறது;  சுயநலத்திற்காக செயல்படும் தி.மு.கவை வரும் தேர்தலில் மக்கள் நிராகரிப்பார்கள்; தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க முற்றிலும் அகற்றப்படும். 

    தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே, சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள்; என்ன வளர்ச்சி பணிகளை செய்யப் போகிறோம் என எதிர்க்கட்சியினருக்கு எந்த திட்டமும் இல்லை;ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது. 

    தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு, வளர்ச்சியடைந்த தமிழ்நாடு மிக அவசியம்; நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் மூலம் வணிகம் பெருகியிருக்கிறது. விருதுநகரில் பிரதம மந்திரி ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார். 



  • Feb 28, 2024 13:37 IST
    'டெல்லி - தமிழகம் தூரம் குறைந்துவிட்டது' - நெல்லையில் மோடி பேச்சு

     

    “டெல்லி - தமிழகத்தின் தூரம் மிகவும் குறைந்துவிட்டது.மிகவும் நெருங்கிவிட்டது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் மூலைமுடுக்கில் இருக்கும் அனைவருக்கும் கிடைத்துள்ளது“ என்று நெல்லையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். 



  • Feb 28, 2024 12:44 IST
    தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்- மோடி

    திருநெல்வேலி அல்வாவைப் போன்ற, இனிமையான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.  தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள் .  உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம் . பாஜக தான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி .  உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள் .  இது மத்திய அரசின் செயல்பாடுகளால் தான் வருகிறது - பிரதமர் நரேந்திர மோடி



  • Feb 28, 2024 12:43 IST
    வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மண், நெல்லை மண்: அண்ணாமலை

    “பூலித்தேவன், ஒண்டிவீரன், சுந்தரலிங்கனார், கப்பலோட்டிய தமிழன் வஉசி, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மண், நெல்லை மண்- அண்ணாமலை 



  • Feb 28, 2024 12:14 IST
    தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை  பலமடங்காக திருப்பித் தருவேன்-மோடி

     தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிந்தார்கள். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை  பலமடங்காக திருப்பித் தருவேன். தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்று அக்கறையோடு இருப்பேன் என வாக்குறிதி அளிக்கிறேன் – பிரதமர் மோடி  



  • Feb 28, 2024 12:04 IST
    தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவோம் - பிரதமர் நரேந்திர மோடி

    மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2,000 கி.மீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன; 5 வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றன; நான் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் கட்சிகளின் சித்தாந்தமே தவிர, எனது தனிப்பட்ட கருத்துகள் கிடையாது; தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவோம்" - பிரதமர் நரேந்திர மோடி



  • Feb 28, 2024 11:26 IST
    தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை

    தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை . வளர்ச்சி குறித்து எனது கோட்பாட்டை செய்தியாக வெளியிட தமிழக  அரசு விடுவதில்லை. திட்டங்கள் மூலம்  தமிழ்நாட்டில் சாலை வழி இணைப்புகள் மேலும் சிறப்பாக மாற உள்ளது.  தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்பு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடைய நல்ல உறவு மேலும் உருவாகியிருக்கிறது. நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.



  • Feb 28, 2024 11:04 IST
    கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது: மோடி

    மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில் தலைசிறந்து விளங்குகிறோம்; கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது; உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் 8% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.-மோடி



  • Feb 28, 2024 11:02 IST
    காங்கிரஸ் ஆட்சியின் போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது- மோடி

    காங்கிரஸ் ஆட்சியின் போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன். கசப்பான உண்மையை சொல்கிறேன். முந்திய காங்கிரஸ் ஆட்சியின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்து காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்தது. தற்போதுதான் அதை செயல்படுத்தி வருகிறோம்- மோடி  



  • Feb 28, 2024 10:52 IST
    உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல் தொடக்கம்

    நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு  நீர்வழிக் கப்பல்  பிரதமர் தொடங்கி வைத்தார். மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஓட்டன்சந்திரம்- மடத்துக்குளம் 4 வழிச்சாலை , நாகை – தஞ்சை, தேசிய நெடுஞ்சாலை பிரிவின் இருவழிப் பாதை, ஜித்தண்டஹள்ளி- தருமபுரி 4 வழிச்சாலை தொடக்கம்.



  • Feb 28, 2024 10:43 IST
    தூத்துக்குடியை கப்பல் போக்குவரத்து மையமாக மாற்ற, அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது

    தூத்துக்குடியை கப்பல் போக்குவரத்து மையமாக மாற்ற, அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது; இந்திய வரைபடத்தின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டு இன்றைய நிகழ்வு; தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள், கனவுகளை இன்று நனவாக்கியுள்ளோம் - பிரதமர் நரேந்திர மோடி



  • Feb 28, 2024 10:43 IST
    குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

    தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி



  • Feb 28, 2024 10:41 IST
    இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: மோடி

    "இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது; இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" - தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு



  • Feb 28, 2024 10:24 IST
    ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு

    ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி



  • Feb 28, 2024 10:14 IST
    பிரதமர் மோடி நிகழ்ச்சி தொடக்கம் 

    தூத்துக்குடியில் தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்துடன் மோடி நிகழ்ச்சி தொடக்கம் 

    தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு பிரதமர் மோடியின் நிகழ்ச்சி தொடக்கம். முதலில் தேசிய கீதமும், பின் தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. 



  • Feb 28, 2024 09:54 IST
    தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் மோடி

    தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் மோடி - இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்பு



  • Feb 28, 2024 09:52 IST
    பிரதமர் நிகழ்ச்சி: 10,000க்கும் மேற்பட்டோர் அனுமதி

    தூத்துக்குடியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதி



  • Feb 28, 2024 09:14 IST
    ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி புறப்பட்டார்

    தூத்துக்குடி புறப்பட்டார் பிரதமர். மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி புறப்பட்டார். பிரதமர் மோடி தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்



  • Feb 28, 2024 09:13 IST
    தூத்துக்குடி புறப்பட்டார் பிரதமர் மோடி

    தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரயில் பாதை திட்டங்கள், சாலை திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 



  • Feb 28, 2024 09:08 IST
    தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    "தூத்துக்குடி, நெல்லை - ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்"

    பல்லடத்திலும், மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றதாக, பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் பதிவு

    சற்று நேரத்தில் தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

    தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் - பிரதமர் மோடி



  • Feb 28, 2024 07:55 IST
    பிரதமர் விழா அழைப்பிதழில் கனிமொழி பெயர் சேர்ப்பு  

    தூத்துக்குடியில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழா அழைப்பிதழில் கனிமொழி எம்.பி பெயர் சேர்ப்பு. தனியார் செய்தி நிறுவன எதிரொலியாக எம்.பி பெயர் சேர்ப்பு. புதிய அழைப்பிதழில் அமைச்சர் கீதா ஜீவன் பெயர் இடம்பெற வில்லை. 



  • Feb 28, 2024 07:49 IST
    மோடி இன்று தூத்துக்குடி பயணம்

    குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

    மேலும், இப்பகுதியில் 2000 பரப்பளவில் விண்வெளி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. 

    குலசேகரப்பட்டினம், அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன. 



  • Feb 28, 2024 01:12 IST
    மதுரை ஆதீனத்தை கண்டதும் காரை நிறுத்திய மோடி

    மதுரை ஆதீனத்தை கண்டதும் பிரதமர் நரேந்திர மோடி காரை நிறுத்தினார்.



  • Feb 28, 2024 01:07 IST
    மீனாட்சி கோவில் தரிசனம் பாக்கியம்: நரேந்திர மோடி

    “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.



  • Feb 27, 2024 21:24 IST
    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மோடி தரிசனம்


    தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் மதுரை மீனாட்சியம்மனை பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.



  • Feb 27, 2024 19:38 IST
    இரக்கம் இல்லாத மோடி ஆட்சி: மார்க்சிஸ்ட் விமர்சனம்

    தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும் பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு இருக்கிறது என மோடி பேசியுள்ளார். புயல் வெள்ளம் என வந்தபோது மோடி ஆட்சி நிதியுதவி செய்யவில்லை.
    இதயத்தில் இரக்கமே இல்லாமல் நடந்துகொண்ட ஆட்சிதான் மோடி ஆட்சி என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.



  • Feb 27, 2024 19:22 IST
    ஜெர்மன் பாடகியின் பக்தி பாடலை ரசித்த மோடி

    திருப்பூரில் என் மண் என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். முன்னதாக, ஜெர்மன் பாடகியின் பக்தி பாடலை தாளமிட்டு ரசித்து கேட்டுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளன.



  • Feb 27, 2024 18:11 IST
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று இரவு மோடி சாமி தரிசனம்

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி இன்றிரவு சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.



  • Feb 27, 2024 18:09 IST
    பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார் மோடி - ஆர்.எஸ். பாரதி காட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி தி.மு.க ஆட்சியை விமர்சனம் செய்து பேசிய நிலையில்,   தமிழகத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கிறார் மோடி என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.  “தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தி.மு.க இருப்பதால் பிரதமர் போன்றோர் விமர்சனம் செய்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் விமர்சிது வருகின்றனர். பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி” என்று ஆர்.எஸ். பாரதி காட்டமாக விமர்சித்துள்ளார். 



  • Feb 27, 2024 18:04 IST
    மோடிக்கு 65 கிலோ பிரம்மாண்ட விரலி மஞ்சள் மாலை

    பல்லடத்தில் நடைபெற்ற  ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு 65 கிலோ எடையுள்ள விரலி மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டது.



  • Feb 27, 2024 16:52 IST
    டெல்லியில் இந்தியா கூட்டணி ஜெயிக்காது என தெரிந்துவிட்டது - மோடி பேச்சு

    பிரதமர் மோடி:  “மத்தியிலே இந்தியா கூட்டணி உருவாகிக் கொண்டு இருக்கிறது. டெல்லியில் எல்லாம் தெரிஞ்சு போச்சு இந்தியா கூட்டணி ஜெயிக்காது என்று தெரிந்து போச்சு. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக அந்த கூட்டணி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான், அந்த பழைய அந்த கொள்ளையடிக்கின்ற கடையை பூட்ட வேண்டும் என்று நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். 2024-ம் ஆண்டில் நாம் அந்த கடையை பூட்ட வேண்டும் என்று நாம் தமிழ்நாட்டில் நடத்திய என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக அந்த பூட்டை நாம் உருவாக்கி இருக்கிறோம் என்று இந்த கூட்டத்தின் மூலமாக நான் சொல்லிக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, தமிழகத்திலே அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதே போல், நம் அத்தனை பேரும் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அத்தனை பேரும் மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு நல்லதொரு ஆட்சி வரவேண்டும் என்று மக்களிடத்தில் சொல்ல வேண்டும், மக்களிடத்தில் செல்ல வேண்டும், வீடு வீடாக செல்ல வேண்டும்,  அவர்களுடைய ஆசிர்வாதங்களை வாழ்த்துக்களை பெற வேண்டும் .ஓட்டுகளை பெற வேண்டும், மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும். இந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தை பார்த்து நான் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். இந்த மோடியின் உத்தரவாதம் இருந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய பாதுகாப்புக்கான உத்திரவாதம் இருந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அத்தனை பேரும் மக்களிடத்திலே சென்று அவருடைய வாழ்த்துகளைப் பெற வேண்டும்” என்று கூறினார்.



  • Feb 27, 2024 16:46 IST
    தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது - மோடி 

    மோடி பேச்சு:  நாம் புதிய பாரத்தை உருவாக்க மிகப்பெரிய முயற்சி எடுத்து வருகிறோம்; இந்த இந்தியா கூட்டணியில் இருக்கிறவர்களைப் பற்றி அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும். அவர்களுக்கு நான் செய்கின்ற இந்த நாட்டினுடைய வளர்ச்சி தொழில் வளர்ச்சி விவசாய வளர்ச்சி பெண்களுக்கான வளர்ச்சி மீனா மக்களுக்கான திட்டம் விவசாயிகளுக்கான திட்டம் இப்படிப்பட்ட வளர்ச்சியை நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எப்படியாவது என் மீது அவதூறுகளை பரப்பி மோடி நல்லது செய்ய மாட்டார் என்று ஒரு பொய்யான செய்தியைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே அவர்கள் இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள் ஆகவே அந்த கொள்ளையடிக்கின்ற கடையை நாம் பூட்ட வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது.” என்று கூறினார்.



  • Feb 27, 2024 16:38 IST
    தி.மு.க ஆட்சி எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல நடக்கிறது - மோடி 

     

    மோடி பேச்சு: “இன்றைக்கு நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மரியாதைக்குரிய எம்ஜிஆர் எனது நினைவுக்கு வந்தார். நான் அவர் பிறந்தவுடன் இலங்கைக்கு சென்றபோது அவர் பிறந்த ஊரான கண்டிக்க சல்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கே மக்களிடத்தில் நான் பேசினேன். அப்போ இன்றைக்கு அவர் எங்கு பணியாற்றினாரோ அந்த மண்ணுக்கு நான் இங்கு வந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, அந்த குடும்ப பாரம்பரியத்தில் இருந்து ஆட்சிக்கு வரவில்லை. மிகப்பெரிய நல்லாட்சி நடத்தியதன் மூலம் மரியாதைக்குரிய எம் ஜி ஆர் தரமான கல்வியும் நல்ல சுகாதாரத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டில் இளைஞர்கள் பெண்களும் அவரை மிகப் பெரிய அளவில் மதித்து வந்திருக்கிறார்கள். அதற்காகத்தான் ஏழை மக்கள் அத்தனை பேரும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவர் என்று இன்றைக்கும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, எம்ஜிஆர் குடும்ப அரசியல் காரணமாக வரவில்லை. ஆனால், அவர் துரதிஷ்டவசமாக இன்றைக்கு திமுக தமிழகத்தில் எம்ஜிஆரை அவமதிப்பது போல அவரை கேவலப்படுத்துவது போன்ற ஒரு ஆட்சி இங்கே நடந்து கொண்டிருக்கிறது. எம்ஜிஆர்க்கு பிறகு இந்த நாட்டில் யாராவது ஒருவர் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது அமையார் ஜெயலலிதா. அவர்களின் ஆட்சி தான். அவர் தம்முடைய வாழ்க்கையை முழுவதையும் தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார் என்பதை என்னால் சொல்ல முடியும். சில நாட்களுக்கு முன்னால் தான் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த மண்ணிலிருந்து அவருக்கு நான் மீண்டும் ஒரு எனது அஞ்சலி செலுத்துகிறேன். அது மட்டுமல்ல ஜெயலலிதா அவர்கள் அவர்களுடன் நான் நெருங்கிய பல்லாண்டு காலம் பணியாற்றிய இருக்கிறேன். அவர் மக்களோடு செயல்படுத்திக் கொண்டு மக்களுக்காக வாழ்ந்தார் என்பதை நாம் அத்தனை பேர் அறிவேன். எம்ஜிஆர் கொள்கை கடைபிடித்து அதன் மூலமாக மக்களுக்காக பணியாற்றினார் இன்றைக்கும் தமிழகத்தில் அத்தனை வீடுகளிலும் அவர்கள் நினைவு வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.



  • Feb 27, 2024 16:30 IST
    யு.பி.ஏ ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை - மோடி

    மோடி பேச்சு: தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சிக்கு முன்னுரை கொடுத்து கொண்டு இருக்கிறது. ஆனால், நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும், 2014 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு யூபிஏ திமுக - காங்கிரஸ் அரசாங்கம் தமிழகத்துக்கு எவ்வளவு கொடுத்ததோ அதைவிட நம்முடைய அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகமான பணத்தை கொடுத்து இருக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்காக என்னெல்லாம் தேவையோ அத்தனையும் மத்திய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் எத்தனை ஆண்டு காலமாக நீண்ட ஆண்டு காலமாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் முக்கியமான மந்திரி பதவிகளை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு எந்த திட்டத்தை முன்னெடுக்கவில்லை எந்த பங்கையும் வகிக்கவில்லை” என்று கூறினார்.



  • Feb 27, 2024 16:27 IST
    தமிழகத்தைக் கொள்ளை அடிப்பவர்கள் பா.ஜ.க குறித்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் - மோடி

    மோடி பேச்சு: தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சியில் இருந்ததில்லை. ஆனால் தமிழ்நாடு மக்கள் இதயத்தில் பா.ஜ.க இருந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சகோதரர்களுக்கு நன்றாகத் தெரியும் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து கொண்டு பல ஆண்டு காலமாக இந்த தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள் இதை புரிந்து கொண்டு பாஜகவின் பலத்தை புரிந்துகொண்டு அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மக்களுக்குப் பொய்யைச் சொல்லி மக்களை திசைதிருப்பி தீயை மூட்டி விரோதத்தை விளைவித்து அதன் மூலமாக பொதுமக்களை பிரித்து அவருடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தை கலந்து கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினர். 



  • Feb 27, 2024 16:12 IST
    தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும் என்பதில் நம்பிக்கை  - மோடி பேச்சு

    பல்லடத்தில் மோடி பேச்சு: நண்பர்களே டெல்லியில் ஏ.சி.யில் அமர்ந்துகொண்டு பார்த்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இங்கே வந்திருக்கும் கூட்டத்தின் மூலம் தமிழ்நாடு தேசியத்தின் பக்கம் என்பதை நிரூபித்துள்ளீர்கள். 2024-ல் நாட்டில் பா.ஜ.க பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறினார்.



  • Feb 27, 2024 16:08 IST
    நாட்டின் வளர்ச்சியில் கொங்கு பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது - மோடி

    நாட்டின் வளர்ச்சியில் கொங்கு பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார். 



  • Feb 27, 2024 16:07 IST
    என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு: அண்ணாமாலை பேச்சு

    என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமாலை பேசினார்.



  • Feb 27, 2024 15:56 IST
    பொதுக்கூட்ட மேடைக்கு எல். முருகன், அண்ணாமலையுடன் திறந்த காரில் வந்த மோடி

    பல்லடத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி பொதுக்கூட்ட மேடைக்கு எல். முருகன், அண்ணாமலையுடன் திறந்த காரில் வந்தார் மோடி.



  • Feb 27, 2024 15:47 IST
    பல்லடம் வந்தடைந்தார் மோடி 

    கோவை சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பல்லடம் வந்தடைந்தார். பல்லடத்தில் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தடைந்தார் மோடி.



  • Feb 27, 2024 15:40 IST
    பிரதமர் மோடி வருகை: மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை

    பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாலை 4.30 உதல் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று இரவே மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்ல உள்ளதால் பக்தர்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.



  • Feb 27, 2024 15:36 IST
    கோவையில் இருந்து பல்லடம் புறப்பட்டார் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார். பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் கோவை விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தார். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பல்லடம் புறப்பட்டார்.



PM Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment