Prime Minister Narendra Modi in Chennai High Lights: இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று (செப்.30) நடைபெற்றது.
இவ்விரு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு நரேந்திர மோடி சென்றார்.
பின்னர் அங்கிருந்து ஐ.ஐ.டி. சென்னை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் காலை 9.30 மணிக்கு கலந்துகொண்டு, 'ஹேக்கத்தான்' தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், இணை அமைச்சர் சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே, சிங்கப்பூர் நாட்டின் கல்வித்துறை அமைச்சர் ஒங்க் யெ குங் ஆகியோர் பங்கேற்றார்கள்.
இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
இதுகுறித்த செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் மூலம் உடனுக்குடன் நீங்கள் அறியலாம்.
Live Blog
PM Modi in Chennai: Prime Minister Narendra Modi Chennai Visit Today: சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா மற்றும் இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி குறித்த செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் மூலம் உடனுக்குடன் நீங்கள் அறியலாம்.
உலகின் மிக தொன்மையான மொழி தமிழ் தான் என்று பிரதமர் மோடி சொல்லாத வரை எனக்கு அது தெரியாமல் போனதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். இந்த உண்மையை நான் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன். இந்த பெருமையை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
I am ashamed to confess that until the PM mentioned at the @UN that Tamil is the oldest living language in the world, I was unaware of that fact. We need to to spread much greater knowledge & pride of that distinction throughout India https://t.co/qgx9UKpq51. (1/2)
— anand mahindra (@anandmahindra) September 30, 2019
"உலகின் டாப் 3 ஸ்டார் அப் கண்டறிந்த நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது. வாழ்க்கை முறை நோய்கள் தான் எதிர்கால ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளன. எங்கு வேலை செய்தாலும், எங்கு வந்தாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள். கடமை, திறமை, அர்ப்பணிப்பு உள்ள மாணவர்களுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன" என பிரதமர் மோடி உரையாற்றினார்.
"உலகின் தொன்மையான மொழியான தமிழை நாம் போற்ற வேண்டும். இந்திய இளைஞர்களின் திறமைக்கு பின்னால் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐஐடி விளங்குகிறது. இந்தியாவின் இளைய தலைமுறையினரின் நம்பிக்கையைக் கண்டு உலகத் தலைவர்கள் வியக்கின்றனர்" - பிரதமர் மோடி
ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'மை யங் பிரெண்ட்ஸ்... உங்கள் கண்களில் எதிர்கால வளமான இந்தியாவை நான் பார்க்கிறேன். உங்களை சிறந்த பொறியாளராக மட்டுமில்லாமல் சிறந்த குடிமகனாகவும் ஆசிரியர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். தினம் நேரம் பார்க்காமல் உழைத்து உங்களை இந்த நிலைக்கு அவர்கள் உயர்த்தி இருக்கிறார்கள்" என்றார்.
ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்க உதவும், உலக பாரம்பரிய சின்னம் மாமல்லபுரம். கற்சிற்பங்கள் பழமையான கோவிலுக்கு பெயர் போன மாமல்லபுரத்தை இங்கு வந்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது; தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹேக்கத்தான் வெற்றிக்கும் உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு எனது நன்றி" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
56வது பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று, ஐஐடி மெட்ராஸ் ட்வீட் செய்துள்ளது.
IIT Madras welcomes Shri. @narendramodi, Hon'ble Prime Minister of India as the Chief Guest for the 56th Convocation of Institute on today.
The 56th Convocation will be webcast live on https://t.co/3QSJRnYcUC on 30th, September 2019 from 10 am onwards.#iitmadras #convocation2019 pic.twitter.com/mdLXCcUh5Z— IIT Madras (@iitmadras) September 30, 2019
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடிக்கு வந்திறங்கினார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி* சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி#PMModi pic.twitter.com/CB65iM0xOU— Thanthi TV (@ThanthiTV) September 30, 2019
"சென்னை வந்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நான் இங்கே ஐஐடி பட்டமளிப்பு விழாவுக்கு தான் வந்தேன். ஆனால், நீங்கள் அதிகளவில் திரண்டு வந்து என்னை வரவேற்று உள்ளீர்கள். அமெரிக்காவில் தமிழ் தான் தொன்மையான மொழி என்று நான் உரையாற்றினேன். அங்கு ஊடகங்களில் அதுதான் பேசு பொருளாகிப் போனது. இந்தியாவை பற்றி அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பிளாஸ்டிக்கையே பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை. ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக்கை கைவிடுங்கள்" என்று பிரதமர் மோடி பாஜகவினர் மத்தியில் சென்னை விமான நிலையத்தில் உரையாற்றினார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் மத்தியில் உரையாற்றும் பிரதமர் மோடி,
Speaking at Chennai Airport. Watch. https://t.co/7qWBSkMO5R
— Narendra Modi (@narendramodi) September 30, 2019
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து பிரதமரை வரவேற்றனர்.
"ஐ.ஐ.டி வளாகத்திற்குள் போக்குவரத்து போலீசாரும் நிறுத்தப்படுவார்கள். கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும், ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய பிறகு, பிரதமர் தனது முதல் இடத்தை அடைய வளாகத்திற்குள் 3 கி.மீ தூரத்தில் சாலை வழியாக பயணிக்க வேண்டும். அங்கிருந்து இரண்டாவது இடத்திற்கு மற்றொரு 1.3 கி.மீ. பயணிக்க வேண்டும். இதற்கு போதுமான பாதுகாப்பு அதிகாரிகள் வளாகத்தினுள் இருக்கின்றனர்" என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
"பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வருவதால், ஐ.ஐ.டியை சுற்றியோ அல்லது ஜி.எஸ்.டி சாலையிலோ போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று நாங்கள் உறுதியளிக்க முடியும். தவிர, அனைத்து வி.ஐ.பிகளும் காலை 8 மணிக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், காலை 8.30 மணிக்குப் பிறகு நுழைவு தடைசெய்யப்படும். ஆகவே, பீக் ஹவர்ஸுக்கு முன், அனைத்து வி.ஐ.பி.க்களும் வளாகத்திற்குள் இருப்பார்கள், " என்று ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதன் முறை சென்னை வரும் நரேந்திர மோடி, சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்துக்கு வரும், பிரதமர், ஹெலிகாப்டரிலேயே கிளம்பியும் செல்ல உள்ளார். இதனால், பீக் ஹவர்ஸ் என்று அழைக்கபப்டும் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights