ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக பல முரண்பாடான செய்திகளை ராமதாஸ் கூறி வருகிறார் என்றும் இந்த ஒட்டுக்கேட்பு கருவி பின்னணியில் இருப்பவர்கள், சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பா.ம.க வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், டாக்டர் ராமதாஸ் தனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியது பா.ம.க-வினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக பல முரண்பாடான செய்திகளை ராமதாஸ் கூறி வருகிறார் என்றும் இந்த ஒட்டுக்கேட்பு கருவி பின்னணியில் இருப்பவர்கள், சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பா.ம.க வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார்.
இது குறித்து பா.ம.க. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, கூறியதாவது: “பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 9ம் தேதி நடைபெறும் என கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.
இந்த பொதுக்குழு கூட்டம் மற்றும் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பா.ம.க.வின் விதிகளின்படி 100 சதவீதம்
பின்பற்றி நடக்கிறது. ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக பல முரண்பாடான செய்திகளை ராமதாஸ் கூறி வருகிறார். தொடக்கத்தில் யாரோ வைத்துள்ளார்கள் என்றார். இப்போது வேறுமாதிரி சொல்கிறார். இந்த ஒட்டுக்கேட்பு கருவி பின்னணியில் இருப்பவர்கள், சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். காவல்துறையினர் இதை கண்டுபிடிக்க வேண்டும்.” என்று கே.பாலு கூறினார்.