நிலப்பறிப்பு முயற்சியில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு நடைபயணம் மேற்கொள்கிறார்.
நெய்வேலி அருகே வானதிராயபுரம் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் மேற்கொண்டு புகார் எழுப்பினர் அன்புமணி ராமதாஸ்.
அதை தொடர்ந்து வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி, கரிவெட்டி வரை தனது நடைப்பயணத்தை மேற்கொள்கிறார்.
நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தப் படுகிறது. இந்த முயற்சி சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும் என்றும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்றும் கூறி, மக்கள் புகார் எழுப்பினர்.
என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து, வானதிராயபுரத்தில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கிய அன்புமணி, நாளை மாலை கிரிவெட்டி கிராமத்தில் அவரது நடைபயணம் நிறைவடைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil