Advertisment

தமிழகத்தில் பா.ம.க- பா.ஜ.க கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறும்: ராமதாஸ்

பா.ம.க- பா.ஜ.க கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்படாமல் உள்ள திட்டங்கள் அனைத்தையும் பாமக மத்திய அரசிடம் போராடி கொண்டு வரும்- ராமதாஸ்

author-image
WebDesk
New Update
Modi Ramados
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திமுக ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இன்னும் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் எப்போது இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisment

திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவின் மக்களவை தேர்தல் கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது. ஜுன் 1-ம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வரும் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மோடி 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ளார். 

தமிழகத்தில் பாமக பாஜக கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்படாமல் உள்ள திட்டங்கள் அனைத்தையும் பாமக மத்திய அரசிடம் போராடி பெற்று தந்து தமிழகம் முன்னேறபாடுபடுவோம். திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3.5 லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படும் என்று தெரிவித்தனர். இந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 2758 நபர்களுக்கு மட்டுமே தேர்வாணையம் மூலம் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த 3 ஆண்டுகளில் 1 லட்சம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த காலி இடங்களுக்கான பணிகள் எப்போது நிரப்பப்படும். அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட கூடாது.

எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் நபர்கள் நேர்முக தேர்வில் குறைந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது. இது அதிக முறைகேடு நடத்த வழி நடக்கும் நிலையில் இது குறித்து விசாரனை நடத்த வேண்டும், இது குறித்து பாமக தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மற்ற கட்சிகள் வாயை திறக்கவில்லை. ஆந்திர மாநிலத்தில் அரசு பணிகளுக்கு நேர்முக தேர்வு முறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

இதை பார்த்து தமிழக அரசும் நேர்முக தேர்வை ரத்து செய்ய வேண்டும், சேவை பெறும் உரிமை சட்டம் கேட்டு விரைவில் பாமக சார்பில் போராட்டம் நடைபெறும். வருவாய்துறை மூலம்  வழங்கப்படும் 26 வகையான சான்றுகளை பெறுவதற்கு சேவை பெறும் உரிமை சட்டம் வழி வகுக்கும். இதுகுறித்து கடந்த சந்திப்பில் நான் வலியுறுத்தி இருந்தேன். இதன் மீதான நடவடிக்கைள் தொடங்கி உள்ளதாக அரசு செயலாளர் விளக்கி உள்ளார். இந்த சட்டத்தை நிறைவேற்ற பாமக சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும்.

தமிழை வளர்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை தமிழை வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 5ம் வகுப்பு வரை தமிழ் பயிற்சி மொழி என்ற அரசாணை 2000ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்தும் 24 ஆண்டுகளாக இதை விசாரனை மேற்கொள்ள தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தமிழ் கட்டாய கல்வி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 

அனைத்து காய்கறி கொள்முதல் விலை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காய்கறிகள் விலை கடுமையாக சரிவதும் பின்னர் கடுமையாக விலை ஏற்றத்தையும் சந்தித்து வருகிறது. இதை தடுக்க கொள்முதல் விலை சட்டத்தை கொண்டு வந்தால் நிலையான வருமானத்தை விவசாயிகளும் வியாபாரிகளும் பெறுவர். மேலும் காய்கறிகளை பதப்படுத்த குளிர் சாதன கிடங்குகளை அமைக்க வேண்டும்.

கந்துவட்டி தற்கொலைகளை தடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த ஆசிரியர்களான கணவன் மனைவி தங்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இதற்கு காரணம் கந்து வட்டி என்று இறந்தவர்கள் செல்பேசி மூலம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கந்துவட்டி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கந்துவட்டி கும்பலுக்கு காவல்துறையினர் ஆதரவாக செயல்படுவதன் காரணமாக இவர்கள் வளர்ந்து வருகின்றனர். இந்த கந்து வட்டி கும்பலுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும். பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசால் மானியம் வழங்கப்படுகிறது. இது தகுதியான நபர்களுக்கு சென்று சேர்வதில்லை. 

போலியான நபர்களின் பேரில் வீடுகள் கட்டுவதாக முறைகேடு நடைபெறுகிறது. குறிப்பாக நாகை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த முறைகேடு அதிகளவு நடைபெறுவதாக குறிப்புகள் கூறுகிறது. இது குறித்து உரிய விசாரனை நடத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவு நிதி ஒதுக்கி வீடுகள் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும். விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சாவூர் சாலைகளை விரிவுபடுத்தும் வேலைகளை உடனடியாக முடிக்க வேண்டும். 2017ம் தொடங்கப்பட்ட இந்த பணிகள் 160 கிமீ முடிவு பெற 7 ஆண்டுகளாக முடிவு பெறவில்லை. இந்த வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்று கூறினார். 

பேட்டியின் போது மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ramadass
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment