நெய்வேலி என்.எல்.சி-யைக் கண்டித்து நாளை (மார்ச் 11) பா.ம.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால், கடலூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் இரவு நிறுத்தப்படும் அரசு பேருந்துகளை பணிமனைக்கு கொண்டுவர அரசு போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் விரிவாக்கத்திற்காக, நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பா.ம.க சார்பில், முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி-யைக் கண்டித்து நாளை (மார்ச் 11) பா.ம.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதனால், பாதுகாப்புக்காக கடலூர் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் நிர்வாகம் சார்பில், திறக்கப்படும் அனைத்து கடைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சாலை போக்குவரத்துக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கிராமப் பகுதிகளில் இரவு நிறுத்தப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் கிராமப் பகுதிகளில் நிறுத்த வேண்டாம், கடலூர் மாவட்டம் முழுவதும் கிராமப் பகுதிகளில் நிறுத்தப்படும் அனைத்து பேருந்துகளையும் இரவு பணிமனைக்கு கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"