/tamil-ie/media/media_files/uploads/2020/10/dr-ramadoss.jpg)
ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை செய்யவும் மறுக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுக அரசு மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான அதிமுகவிலும் திமுகவிலும் முதல்வர் வேட்பாளர்கள் யார் என்பது முடிவாகி விட்டது. அதோடு, இந்த ஆண்டுக்குள்ளாகவே இரண்டு கட்சிகளும் கூட்டணிகளை இறுதி செய்ய முயன்று வருகின்றனர். பெரும்பாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணியே சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக இன்னும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை உறுதி செய்யவில்லை.
அண்மையில் திமுக பொதுச் செயலாளர் துறைமுருகன், அதிமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வரலாம் இங்கே இருந்தும் சில கட்சிகள் செல்லலாம் என்று கூறினார். இதனால், திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. அதே போல, அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், திமுக கூட்டணியில் இருந்து மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என்று கூறினார். இதனால், கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக அரசின் மீது விமர்சனங்கள் வைப்பதை தவிர்த்து வந்தார்.
இதனிடையே, தமிழக அரசு மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பியது. ஆனால், ஆளுநர் இன்னும் அந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது குறித்து, டாக்டர் ராமதாஸ் நேற்று (அக்டோபர் 21) தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கைவிடப்படக்கூடும் என்று நினைப்பதே பெரும் பாவம். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் மாளிகை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இங்குள்ள ஆட்சியாளர்கள் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்” என்று திடீரென பாய்ந்து விமர்சித்துள்ளார்.
ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!#JaganMohan #Andhra
— Dr S RAMADOSS (@drramadoss) October 22, 2020
டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் அதிமுக அரசு மீது திடீரென முன்வைத்துள்ள இந்த விமர்சனம் தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.