Advertisment

டாக்டர் ராமதாஸுக்கு கொரோனா

பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு கொரோனா தொற்று உறுதி

author-image
WebDesk
Jul 13, 2022 19:46 IST
New Update
டாக்டர் ராமதாஸுக்கு கொரோனா

PMK Dr Ramadoss tests positive to covid 19: பா.ம.க நிறுவனர் ராமதாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Advertisment

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அதிகப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் நிலை, பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு அல்ல; பலமான அ.தி.மு.க.,வுக்கு குறி!

இதனிடையே, நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், என பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Corona #Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment