பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், வருமான வரித்துறை ரெய்டு குறித்தும், ஸ்டாலின் குறித்தும், விவசாயிகள் தற்கொலை குறித்த மத்திய அரசின் ஸ்டேட்மென்ட் குறித்தும் காரசாரமாக விமர்சித்து ட்வீட்டியுள்ளார்.
தனது முதல் ட்வீட்டில்,
உழவர்கள் தற்கொலைக்கு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே காரணமல்ல: மத்திய அரசு -காதல் தோல்வியும் காரணம் என்று கதை கட்டி விடுங்களேன்!
— Dr S RAMADOSS (@drramadoss) 19 November 2017
தனது இரண்டாவது ட்வீட்டில்,
தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்: மு.க.ஸ்டாலின் – நவம்பர் 18-ஆம் தேதியை ஏப்ரல் ஒன்றாம் தேதி என நினைத்துக் கொண்டால் இப்படித் தான்!
— Dr S RAMADOSS (@drramadoss) 19 November 2017
தனது மூன்றாவது ட்வீட்டில்,
ஜெயலலிதாவை சசிகலா பாதுகாத்தார்… சசிகலாவை ஜெயலலிதா பாதுகாக்கவில்லை: திவாகரன்-கொள்ளையர்களிடையே மோதல் வந்தால் பேசும் வசனம் இது தான்!
— Dr S RAMADOSS (@drramadoss) 19 November 2017