பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் நடைபயணம் விதிமீறல், கண்டிக்கத்தக்கது என பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் நடைபயணம் விதிமீறல், கண்டிக்கத்தக்கது என்றும், வட தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெடுவதற்கு காரணமாக நடைபயணம் அமையும். நடைபயணத்தில் பங்கேற்பவர்கள் நீதிமன்றம் முன் நிறுத்த வேண்டும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் பா.ம.க தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க டிஜிபி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் எழுத்துப்பூர்வ உத்தரவோ அல்லது இசைவோ இல்லாமல் தமிழகத்தில் 25.7.2025 முதல் 100 நாட்களுக்கு நடைபயணம் ஒன்று ஏற்பாடு செய்திருந்ததை சட்ட விரோதமானது என்றும் அது தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என்றும் கட்சியினுடைய உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடையே தேவையில்லாத மோதலை உருவாக்கி சட்டம் ஒழுங்கு ஏற்று சீர்குலைய வழிவகுக்கும் என்று கொடுத்த ஆட்சேபனையை காவல்துறையுடைய இயக்குனர் டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவை பிறப்பித்து நடைபயணம் தடைசெய்யப்பட்டுவிட்டது.
நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்க சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அந்த சட்டவிரோத நடைப்பயணத்தை தடைசெய்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி மனமாற காவல்துறைக்கும் பாராட்டினை தெரிவிக்கிறது. ஆனால் அதையும் மீறி அதற்காக நேற்று மாலை நடைபயணத்தை ஆரம்பித்து ஒரு பொதுக்கூட்டத்தை நடத்திய விதம் சட்டம் ஒழுங்கு கெடும் என்ற நிலையும் கூட காவல்துறையினுடைய உத்தரவுக்கு ஒத்துழைக்காமல் சட்டத்தை மீறும் நபர்கள் அப்படி செய்துள்ள செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படிப்பட்ட செயல் செய்தவர்கள் மீது சட்டப்படியாக வழக்கு பதிந்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் திரும்பவும் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களேயானால் பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த மனுவின் அடிப்படையில் இயக்குனர் சங்கர் ஜிவால் அவர்கள் காவல்துறைக்கு கொடுத்த சுற்றறிக்கையின் அடிப்படையில் ஏதேனும் மீறுதல் இருந்தால் காவல்துறை நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.அவர்கள் தடையை மீறி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இதன் வாயிலாக பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது. நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள் அப்படி தடையை மீறி ஏதேனும் எங்காவது யாராவது இப்படிப்பட்ட நடைபயணத்தை செய்தால் அதனை அப்போதே காவல்துறைக்கு தகவல் கொடுத்து சட்டத்திற்கு புறம்பாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடப்பார்களேயானால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கட்சியினரை கேட்டுக்கொள்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.