Advertisment

போதைப் பொருள் தமிழ்நாட்டில் பரவுவதற்கு தி.மு.க.,வினரே காரணமாக இருக்கின்றனர்; அன்புமணி

மதுவிலக்கை தி.மு.க அரசு ரத்து செய்ததால் 3 தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டன. இப்போது போதைப் பொருள் தமிழ்நாட்டில் பரவுவதற்கு தி.மு.க.,வினரே காரணமாக இருக்கின்றனர் – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

author-image
WebDesk
New Update
Anbumani Ramados on opening TAMAC Liquor shop during rain season Tamil News

போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட நிர்வாகி கைது செய்யப்பட்ட பிறகு அவரை நீக்குவதன் மூலமாக மட்டும் இதிலிருந்து தி.மு.க தப்பித்துக் கொள்ள முடியாது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

”தொடரும் போதைப்பொருள் கடத்தலும், தி.மு.க.,வின் தொடர்பும்

சென்னையிலிருந்து இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ. 70 கோடி மதிப்புள்ள மொத்தம் 6.93 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருளை காவல்துறையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்ராகிம் என்பவர் உள்ளிட்ட மூவரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கின்றனர். 

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செய்யது இப்ராகிம் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தான் என்பதை அக்கட்சியின் தலைமையும் ஒப்புக் கொண்டு, அவரை தி.மு.க.,விலிருந்து நிரந்தரமாக நீக்கியிருக்கிறது. போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது தி.மு.க நிர்வாகி செய்யது இப்ராகிம். இதற்கு முன் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட போது, அவரது பின்னணியை ஆய்வு செய்தா கட்சியில் சேர்க்க முடியும்? என்று தி.மு.க வினா எழுப்பியது. இப்போது செய்யது இப்ராகிம் என்ற இன்னொரு தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து தி.மு.க என்ன சொல்லப் போகிறது? ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பிறகும் தி.மு.க நிர்வாகிகளின் சட்டவிரோத செயல்களை தி.மு.க தலைமையும், ஆட்சித் தலைமையும் அனுமதித்திருக்கிறது என்பது தான் இதன் பொருள். 

தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை பரப்பி அனைத்து வகை சீரழிவையும் ஏற்படுத்தியவர்களுக்கு தி.மு.க அடைக்கலம் கொடுத்திருக்கிறது. போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட நிர்வாகி கைது செய்யப்பட்ட பிறகு அவரை நீக்குவதன் மூலமாக மட்டும் இதிலிருந்து தி.மு.க தப்பித்துக் கொள்ள முடியாது. போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும். 

இராஜாஜி, ஓமந்துரார், காமராசர், அண்ணா ஆகியோர் கடைபிடித்த கொள்கைகளால் மது என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் உருவானது. ஆனால், மதுவிலக்கை தி.மு.க அரசு ரத்து செய்ததால் 3 தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டன. இப்போது போதைப் பொருள் என்ற பெரும் தீமை தமிழ்நாட்டில் பரவுவதற்கு தி.மு.க.,வினரே காரணமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தும் அதைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தான் குற்றவாளிகளை பிடித்திருக்கிறது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது விழித்துக் கொண்டு போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது தி.மு.க தான் என்று தமிழ்நாட்டு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவாகும் நிலை உருவாகும்.” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Dmk Anbumani Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment