எல்லா பொறுப்புகளையும் விட சிறந்த பொறுப்பாக செயல் தலைவர் பதவி வழங்கியதை அன்புமணி ஏற்க மறுப்பதாகவும், மூச்சுகாற்று உள்ளவரை பா.ம.க.,வின் தலைவராக இருக்க மனசாட்சி கூறியதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது;
பா.ம.க.வில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கிறது, இன்னும் முடிவு எட்டப்படவில்லை. அன்புமணி மன்னிப்பு கேட்டது பிரச்சனை இல்லை. என்னால் துவங்கப்பட்ட பா.ம.க கட்சியில் 96 ஆராயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன்.
எனக்கு மூச்சு இருக்கும் வரை கட்சியின் தலைவராக செயல்படுவேன இது கலைஞர் கருணாநிதியின் பாணி. தன்னலம் கருதாது மக்களுக்கு தொண்டாற்றியவர்களுக்கு பா.ம.க.,வில் நல்ல பொறுப்புகளை கொடுத்துள்ளேன். அந்த பொறுப்புகள் நிரந்தமாக நிலைத்து நீடித்திருக்கும். புதிய பொறுப்புகள் வழங்கியவர்களுக்கு அச்சத்தையும் போக்கி உள்ளேன்.
எனது 60 வது திருமண நாளில் அன்புமணி என்னை சந்திக்க வராதது மன வருத்தம் தான். ஒரு தந்தையாக என்ன மனநிலையோ அந்த மனநிலை இருந்தது.
தைலாபுரம் வீட்டின் முன்பாக போஸ்டர்கள் கிழித்தது விஷகிருமிகளாக இருக்கலாம். யார் செய்தது என்று தெரியாது. யார் படத்தையும் கிழிக்க கூடாது.
எனக்கு முருகர் மாநாட்டிற்கு அழைப்பு வரவில்லை. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டு செய்த எந்த தலைவர்களையும் கொச்சைப்படுத்த கூடாது. இது அரசியல் கட்சி நடத்துகிற அனைத்து கட்சியினருக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்.
பொதுக்குழு கூட்டம் தேர்தல் நெருங்கிற சமயத்தில் கூட்டி என்ன முடிவு எடுக்கலாம் என கேட்கப்படும். அதற்கு முன்னதாக நிர்வாக குழு, மாநில செயற்குழு கூட்டி முடிவு எடுக்கப்படும். கட்சியின் தலைவராக ஆகிவிட்டேன், தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி வைப்பது குறித்து பொதுக்குழு நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்கப்படும்.
எல்லா பொறுப்புகளையும் விட சிறந்தது செயல் தலைவர் பதவி, அந்த பொறுப்பினை அன்புமணிக்கு கொடுத்து இருக்கிறோம். அவர் அதனை ஏற்க மாட்டேன் என்கிறார்.
நாகரீகமாக நளினமாக இருவார்த்தைகளை கலைஞர் கருணாநிதியிடம் கற்றுகொண்டேன். பதவி சுகத்தினை நான் விரும்பி இருந்தால் மத்தியில் எந்த பொறுப்பும் எனக்கு கிடைத்திருக்கும். பிரதமர் மோடி என்னிடம் அன்பாக இருக்கிறார். அரசு கட்டிலுக்கு எப்போதும் போக மாட்டேன், அரசு சுகம் காணமாட்டேன். கட்சிக்காரர்களை தொண்டர்களை உயர்த்தி உயர்த்தி பார்த்தவனாக தான் உள்ளேன்.
என் மூச்சு காற்று உள்ளவரை தலைவராக இருக்க வேண்டும் என தன் மனசாட்சி சொல்லியதால் தலைவராக இருப்பேன். என் மூச்சு காற்று அடங்கிய பின் பொறுப்பிற்கு வரபோவது யார்? முகுந்தனோ சுகந்தனோ வரப்போவதில்லை.
போதை பொருள் பயன்படுத்தறவனுக்கு இரண்டு வருடம் தண்டனை என்றால் விற்பனை செய்பவர்களுக்கு நான்கு வருடமாக தண்டனை வழங்க வேண்டும்.
அன்புமணியிடம் சென்றவர்களின் மனசாட்சி தப்பு என்று தெரிந்ததால் மீண்டும் தன்னிடமே வருகிறார்கள், பா.ம.க.,வில் அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்கியுள்ளேன். ஓய்வறியா உழைப்பாளியாக ஜி.கே மணியை உருவாக்கி உள்ளேன். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். ஆனால் அந்த அளவிற்கு போகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேட்டி அளித்தார்.
பாபு ராஜேந்திரன், திண்டிவனம்