பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே" எனத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பாடலில் வரும், 'நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே, அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே' என்கிற வரியைக் அழுத்தமாக இரண்டு முறை குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் சமூக நீதி (#SocialJustice) என்று குறிப்பிட்ட ஹேஷ்டேக் போட்டுள்ளார். இருப்பினும், அவர் யாரைக் குறிப்பிட்டு இந்த வரிகளுடன் தாக்கி பேசியுள்ளார் என்பதை வெளிப்படுத்தவில்லை.
ஆனால், பா.ம.க நிறுவனர் தலைவர் ராமதாஸ் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தான் குறிப்பிட்டு இருப்பதாக அவரது பதிவுக்கு கமெண்ட் செய்தவர்கள் கூறியுள்ளனர். 'மாநில சுயாட்சியை வேண்டுமென்றே மத்திய அரசிடம் இழக்கும் தி.மு.க' என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் 'உடன்பிறப்புகளுக்கு (தி.மு.க)இந்த பாடல் சரியாக இருக்கும்' என்று கமெண்ட் செய்திருக்கிறார்.
'மு.க ஸ்டாலின் நயவஞ்சகத்தை சுட்டிக்காட்டும் மருத்துவர் அய்யாவின் அருமையான பாடல்' என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே" என்கிற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை பா.ம.க நிறுவனர் தலைவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“