பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை : தஞ்சை, கும்பகோணம் பகுதியில் அமைந்திருக்கிறது திருப்புவனம். இங்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். திருமண நிகழ்வுகளுக்கு சாமியானா, பந்தல் போடுதல், மற்றும் வாடகைப் பாத்திரம் தரும் கடையை நடத்தி வந்தார். சில தினங்களுக்க்கு முன்பு, பாக்கியநாதன் தோப்பு என்ற பகுதிக்கு சென்ற அவர், மதமாற்றம் செய்யும் குழு ஒன்றுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பிப்ரவரி 5ம் தேதி இரவு, தன்னுடைய கடையை பூட்டிவிட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது அவருடைய ஆட்டோவை வழிமறித்த மர்மநபர்கள் சிலர் ராமலிங்கத்தின் இரண்டு கைகளையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவரை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அருகில் இருந்தவர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் ராமலிங்கம்.
இந்நிலையில் திருப்புவனம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் இறுதி காரியங்கள் செய்யமாட்டோம் என்று கூறி அவரின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவிடை மருதூர் பகுதியில் இருக்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இப்பகுதியில் வன்முறை வெடிக்காமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், 200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை : ராமதாஸ் கண்டனம்
இந்நிலையில், பாமக நிறுவனர் டாமதாஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதமாற்றத்தை தட்டிக் கேட்டதற்கு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. மனசாட்சியுள்ள எவரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கில் இருந்த பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது...