ஹிந்தி தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதவும், அதை தேசிய மொழியாகப் பார்க்க வேண்டும் என்று மன்சுக் மாண்டவியா கூறியதற்கு ம.தி.மு.க நிறுவனர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஹிந்தி சலாஹ்கர் சமிதி நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ஹிந்தி தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதவும், அதை தேசிய மொழியாகப் பார்க்க வேண்டும் என்று கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாண்டவியாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ஜ.க அரசு ஹிந்தியை தேசிய மொழியாகக் கருதி அதை திணிப்பது, நமது நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது. தேசிய இனக்குழுக்களின் மொழி, இன மற்றும் கலாச்சார உரிமைகளை மதிப்பதிலும் பாதுகாப்பதிலும்தான் இந்தியாவின் கலாச்சார ஒற்றுமை உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், இந்தி தேசிய மொழியும் இல்லை, இந்தியாவை ஒருங்கிணைக்க மொழி உதவவில்லை என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“