scorecardresearch

இ.பி.எஸ் காலில் விழுந்த பா.ம.க எம்.எல்.ஏ; கட்சியினர் அதிர்ச்சி

பா.ம.க எம்.எல்.ஏ அருள் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்தது பா.ம.க நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அருள் விளக்கம் அளித்துள்ளார்.

PMK, PMK MLA Arul, Edappadi K Palaniswami, Tamilnadu, பாமக எம் எல் ஏ, எடப்பாடி பழனிசாமி, பாமக எம் எல் ஏ அருள், எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம் எல் ஏ

பா.ம.க எம்.எல்.ஏ அருள் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்தது பா.ம.க நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அருள் விளக்கம் அளித்துள்ளார்.

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் கபடி உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, கபடி போட்டியைத் தொடங்கி வைத்து வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த சேலம் மேற்கு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ அருள், மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தார். பா.ம.க எம்.எல்.ஏ காலில் விழுந்ததை கண்டு கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, மேடையில் தொண்டர்களை கவனித்துக்கொண்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி தன்னை கவனிக்கவில்லை என்று அந்த பக்கமும் இந்த பக்கமும் திரும்பிய பா.ம.க எம்.எல்.ஏ அருள், இ.பி.எஸ் பார்வையில் படும்படி அவருடைய இடது பக்கம் சென்று நின்றுகொண்டார்.
அப்போது விழா குழு சார்பில், பா.ம.க எம்.எல்.ஏ அருளுக்கு சால்வை அணிவிக்கும் படி பழனிசாமி தெரிவித்ததையடுத்து அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.0

பா.ம.க எம்.எல்.ஏ அருள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த சம்பவம் பா.ம.க நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், தன்னைவிட மூத்தவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து ஆசி பெற்றதக அருள் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pmk mla bows at edappadi palaniswamis feet pmk cadres gets shocks