Advertisment

'உதயநிதி நல்ல அமைச்சர்; மேலும் உயர்வு பெற வேண்டும்': சட்டசபையில் ஜி.கே மணி பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சுய உதவிக் குழுக்களுக்கு கட்டடம் கட்டுவது தொடர்பாகக் கேள்வியை எழுப்பிய பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, இப்படி ஒரு நல்ல அமைச்சர் இந்தத் துறைக்குப் பணியாற்றுகிறார். அவர் மேலும் உயர வேண்டும் என அமைச்சர் உதயநிதியை புகழ்ந்தார்.

author-image
WebDesk
New Update
PMK MLA GK Mani praises Minister Udhayanidhi, PMK, GK Mani, உதயநிதி நல்ல அமைச்சர்; மேலும் உயர்வு பெற வேண்டும், சட்டசபையில் ஜி.கே மணி பேச்சு, PMK MLA GK Mani praises Udhayanidhi, TN Assembly

பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே. மணி - அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சுய உதவிக் குழுக்களுக்கு கட்டடம் கட்டுவது தொடர்பாகக் கேள்வியை எழுப்பிய பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, இப்படி ஒரு நல்ல அமைச்சர் இந்தத் துறைக்குப் பணியாற்றுகிறார். அவர் மேலும் உயர வேண்டும் என அமைச்சர் உதயநிதியை புகழ்ந்தார்.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய தினம் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை விமான நிலையம் தொடர்பாகக் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு இன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது, பென்னாகரம் தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே. பேசினார். அப்போது, “மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவன செய்யுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கிக்கடன் பெற மாதம் 6 முறை குழு கூட்டம் நடத்தி சேமிப்பு செய்து கணக்கு புத்தகங்களை முறையாக பராமரிக்க வேண்டும். சுய உதவி குழு கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடனுதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் சுய உதவிக்குழுவினரின் வங்கி கணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது.

21 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022 - 23-ம் நிதி ஆண்டில் ரூ.25,000 கோடி வங்கி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆனால், ரூ.25,219 கோடி சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி அளித்துள்ளோம். இதன் மூலம் 4,39, 349 சுய உதவி குழுக்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த நிதி நிலை அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் அந்த இலக்கைவிட அதிக அளவில் வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் தான் முதல் முதலாக மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்டது. சுய உதவிக்குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடன் உதவியை அரசும், முதலமைச்சரும் இதை கடன் தொகையாக பார்க்கவில்லை. சுய உதவிக்குழுவில் பங்கேற்றுள்ள சகோதரிகளின் உழைப்பிற்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கை தொகையாக தான் பார்க்கிறோம்.” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதியின் பேச்சுக்கு தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் பேசிய உதயநிதி, “பெண்கள் முன்னேற்றத்துக்கு வழங்கும் சுய உதவிக்குழு நிதி கடன் தொகை அல்ல, அது நம்பிக்கை தொகை” என்று கூறினார்.

அப்போது, நன்றி சொல்லி அமர்ந்திருந்த ஜி.கே. மணி அமைச்சர் பேச வேண்டும் எனக் கூறினார். அதற்கு, அமைச்சர் உதயநிதி, “நான் ஆழமான பதிலைத் தெரிவித்தேன், நீங்களும் அதற்கு ஆழமான நன்றியைத் தெரிவித்துவிட்டீர்கள். ஒருவேளை வேறு கேள்வி இருந்தால் கேளுங்கள்” என்றார். அதற்கு, “இப்படி ஒரு நல்ல அமைச்சர் இந்தத் துறைக்குப் பணியாற்றுகிறார். அவர் மேலும் உயர வேண்டும்” எனப் புகழ்ந்து தள்ளினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Udhayanidhi Stalin Pmk Leader Gk Mani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment