விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து திண்டிவனம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து பா.ம.க.வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான சி.சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பெஞ்சல் புயல் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மரங்கள் விழுந்தன. வீடுகள் சேதமடைந்தன, விளைநிலங்கள் நீரில் மூழ்கின. இதனையடுத்து தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்தது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவகுமார் தலைமையில் கூட்டேரிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின்பு போராட்டத்தை எம்.எல்.ஏ கைவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“