தமிழ் சமூகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லாததால், அதை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ம.க., எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை சார்பாக வைக்கப்படும் கோரிக்கைகளை குறித்து விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய பா.ம.க.,வை சேர்ந்த தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பேசியுள்ளார். தமிழகத்தின் சார்பாக ஐ.பி.எல்.,இல் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தமிழக அணி என்று விளம்பரம் செய்து, அதைவைத்து மக்களிடம் லாபம் பெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரைக்கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து மக்களிடம் லாபம் எடுப்பதாக பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பேசியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil