Advertisment

'டாக்டர் ஐயாவுக்கு பாரத ரத்னா வழங்கணும்'- அன்புமணி; 'பெற மாட்டேன்'- ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு பாரத ரத்னா விருது வழங்காதது வருத்தம் அளிப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில், “பாரத ரத்னா உட்பட எந்த விருது கொடுத்தாலும் நான் அதை வாங்க மறுப்பேன்” என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani and Ramadoss

டாக்டர் அன்புமணி ராமதாஸ் - டாக்டர் ராமதாஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை என்று வருத்தம் தெரிவித்த நிலையில், பாரத ரத்னா உட்பட எந்த விருது கொடுத்தாலும் நான் அதை வாங்க மறுப்பேன்” என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 

Advertisment

சென்னையில் பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை (01.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: “"ஒரு கட்சியினுடைய வெற்றியை எப்படி நிர்ணயம் செய்வது? எப்படி எடை போடுவது? சிறந்த கொள்கை, அதிகமான இளைஞர்களைக் கொண்டது, அதிகமான போராட்டங்களைச் செய்த கட்சி, தொலைநோக்கு திட்டங்கள் அதிகமாக கொண்டு கட்சி என்றால் அது பாமகதான். ஆனால், ஒரு கட்சியினுடைய வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது. அக்கட்சியில் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களை வைத்துதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதற்காகத்தான், நாம் அரசியல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

மக்கள் மனதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், ஆட்சியதிகாரம் வந்தால்தான், மக்களும், ஊடகங்களும் அப்போதுதான் முதன்மையான கட்சி என்று கூறுவார்கள். தமிழ்நாட்டில் 2 கட்சிகள் 56 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருகின்றன. அவர்களைவிட அதிக தகுதியும், திறமையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட கட்சி பா.ம.க. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 44 ஆண்டு காலமாக, அடித்தள மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற உழைப்பை இந்தியாவில் உள்ள வேறு எந்த தலைவர்களும் செய்தது கிடையாது.

சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு விருதுகளை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு வந்த பிறகு, எனக்கு ஒரு மிகப்பெரிய வருத்தம் இருந்தது. அதில் பாரத ரத்னா விருது வழங்கினார்கள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் போன்ற விருதுகளையெல்லாம் வழங்கினார்கள். அதிலும், பாரத ரத்னா இந்தியாவினுடைய முதன்மை விருது அதுதான். அதை சமூகப் போராளி, பீகாரின் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு வழங்கினார்கள். மிக்க மகிழ்ச்சி, தகுதியானவர், நிச்சயமாக அவருக்கு வழங்க வேண்டும். ஆனால், எனக்கு பெரிய வருத்தம், 85 வயதில், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் எவ்வளவோ சாதனைகள் செய்த நமது மருத்துவர் ஐயாவுக்கு ஏன் அதை ஏன் வழங்கவில்லை என்ற ஒரு ஆதங்கம், ஒரு வருத்தம் எனக்கு இருந்தது. அது நியாயமான வருத்தம்தான். 

கர்பூரி தாக்கூ பீகாரினுடைய முன்னாள் முதலமைச்சர், முடிதிருத்துகின்ற சமுதாயத்தைச் சார்ந்தவர், பீகாரில் இடஒதுக்கீடைக் கொண்டுவந்தவர். அதனால், அவர்களுக்கு கொடுத்திருக்கின்றார்கள். அதை பாராட்டுகின்றோம். முதலமைச்சராக இருந்து சாதனைகள் செய்வது ஒரு பெரிய காரியமே கிடையாது. அங்கே கையெழுத்து போடுகின்ற அதிகாரம் இருக்கிறது. ஆனால், எனக்கு பதவி வேண்டாம், பொறுப்பு வேண்டாம், சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ எனது கால்கள் படாது என்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சாதனை செய்ததுதான், உயர்ந்த சாதனை. நம்முடைய ஐயா அதை செய்து முடித்திருக்கிறார். இந்தியாவிலேயே 6 இடஒதுக்கீடுகளைப் பெற்ற ஒரே தலைவர் மருத்துவர் ஐயாதான். 

தி.மு.க தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். 1949-ல் கட்சியைத் தொடங்கி, 1967-ல் ஆட்சிக்கு வருகிறார்கள். அ.தி.மு.க தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். 72-ல் தொடங்கி, 1977-ல் ஆட்சிக்கு வருகிறார். ஆனால், பா.ம.க தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இது எப்போது மாறும்?. மக்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கிறது, அதை அனைவரும் சேர்ந்து கொண்டு வரவேண்டும்.” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இதைத் தொடர்ந்து, பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,  “எனக்கு பாரத ரத்னா விருது கொடுத்தாலும், வேறு எந்த விருது கொடுத்தாலும், நான் அதை வாங்க மறுப்பேன். அதைவிட சிறந்த விருது, பா.ம.க சொந்தங்களின் மனதில் நான் வாழ்வது தான். கூட்டணி குறித்து சரியான முடிவெடுப்போம். பா.ம.க-வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன்” என்று ராமதாஸ் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment