சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் இன்று (நவ.20) காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் பிரதமர் நேரு குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தவறாகப் பேசியதாக அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்தது. கண்டன தீர்மானத்தில், சமூக நீதியை காப்பாற்றிய மறைந்த முன்னாள் பிரதமர் நேருவை ராமதாஸ் பழித்துப் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இடஒதுக்கீடு விவகாரத்தில் நேருவுக்கு எதிராக வடிகட்டிய பொய்யை ராமதாஸ் கூறியிருக்கிறார். ஆதாரம் அற்ற, உள்நோக்கம் கொண்ட கருத்தை பேசியுள்ளார். இந்த கருத்தை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் அதுதொடர்பாகவும் காங்கிரஸ் இன்று ஆலோசனை நடத்தியது. தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி நிர்வாகிகளை பலப்படுத்துவது. தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“