/indian-express-tamil/media/media_files/eU0Rq9hAkJDarGO4mpjP.jpg)
PMK Ramalingam murder case
பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, கும்பகோணம் அருகே திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், திருபுவனம், மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக நகரச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்த இவர் அந்தப்பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்தார். இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
என்ஐஏ அதிகாரிகள் இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (39), கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (42), வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன்(33), திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத் (32), திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன்(33) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தலைமறைவான இந்த 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இவர்கள் புகைப்படங்கள் அடங்கிய நோட்டீஸ் மாநிலத்தின் பல்வேறு பொது இடங்களில் ஓட்டப்பட்டுள்ளன. தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன், ஒரு குற்றவாளிக்கு 5 லட்சம் வீதம் 5 குற்றவாளிகளுக்கும் சேர்த்து 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் என்ஐஏ அறிவித்துள்ளது.
இந்நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சோதனை நிறைவடைந்ததும் இது குறித்த விரிவான தகவல்கள் என்ஐஏ தரப்பிலிருந்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us