திண்டிவனத்தில் ஒரே நாளில் பா.ம.க-வின் 2 நிகழ்ச்சிகள்: அன்புமணி நடைபயணம்; ராமதாஸின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்

பா.ம.க-வில் ஒரே நாளில் இரண்டு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணமும் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

பா.ம.க-வில் ஒரே நாளில் இரண்டு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணமும் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Dr Ramadoss Anbumani 2

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. மேலும், ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆகஸ்ட் 31
தேதிக்குள் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Advertisment

அந்த கெடு நேற்று முடிவடைந்தது. ஆனால் இதுவரையில் அன்புமணி ராமதாஸ் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு சம்பந்தமாக
எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், பா.ம.க ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தையாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை கூடியது.

இதில் தலைமை செயலாளர் அன்பழகள், சேலம் எம்.எஸ்.ஏ. அருள் வந்தவாசி தொகுதி எல்.வி. துரை, தலைமை
அரசியல் ஆலோசகர் குழு  உறுப்பினர் சேலம் சதாசிவம் மாநில மகளிர் செயலாளர் தஞ்சாவூர் பானுமதி, ஆடுதுறை ம.க. ஸ்டாலின் திருமலை குமாரசாமி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அன்புமணி மீது என்ன நடவடிக்கை என்பது பற்றி ஒழுங்கு நடவடிக்கை குழு விவாதித்து அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையை டாக்டர் ராமதாஸிடம் வழங்கப்பட்டது.

Advertisment
Advertisements

ஒழங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் சேலம் அருள் எம் எல் ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஒழங்கு நடக்கை குழு உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் தைலாபுரத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்பது நிர்வாகிகள் பரிந்துரையின் பேரில்  சீல் வைத்த கவரை டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்துள்ளோம். இதில் பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் ஒரே மாதிரியாக உள்ளது. இந்த முடிவுகளை மாற்றியமைக்கும் அதிகாரம் டாக்டர் ராமதாஸுக்கு உள்ளது. வருகின்ற 3-ம் தேதி பா.ம,க நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடக்கிறது. நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். அன்றைக்கு அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார். பா.ம.க இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி. டாக்டர் ராமதாஸ் முடிவெடுப்பார். 

நாளை 2-ம் தேதி பா.ம.க மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் வன்னியர் சங்க தலைவர்கள் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். முன்னதாக அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க கூட்டணிக்கு பா.ம.க வரும் என்று கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு டாக்டர் ராமதாஸ் இதற்கு முடிவு எடுப்பார். அவர் எந்த கூட்டணியில் அங்கம் வகிக்க முடிவு செய்கிறாரோ, அந்த கூட்டணி தான் வெற்றி பெறும், அவர்கள் தான் அடுத்த ஆட்சியை அமைப்பார்கள். மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை டாக்டர் ராமதாஸ்  தெரிவித்தார். 

அன்புமணி ராமதாஸ் நிறுவனர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதைக் கேட்டு செயல் தலைவராக செயல்படுவேன் என்று கூற வேண்டும் என பா.ம.க தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம், வெகு விரைவில் அது நடைபெறும்” என்று அருள் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

திண்டிவனத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீடு பகுதியில் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை மேற்கொள்கிறார். இதனால், திண்டிவனத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.  பா.மக தலைவர் அன்புமணி தமிழ் மக்கள் உரிமையை மீட்போம் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடை பயணத்தை மேற்கொண்டார். நேற்று அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார். அதன் பின்பு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பயணத்தை மேற்கொள்கிறார். இன்று 12 மணி அளவில் செஞ்சி கோட்டை வந்தார், செஞ்சி கோட்டையை பார்வையிட்டு அவர் அங்கு வெங்கட்ராமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் திண்டிவனம் புறப்பட்டு சென்றார். டாக்டர் ராமதாஸின் சொந்த வீடு அமைந்துள்ள வீட்டில் தற்போது ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி வசித்து வருகிறார். 

அன்புமணி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தாலுக்கா அலுவலக சந்திப்பில் இன்று மாலை 5 மணி அளவில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு, வண்டி மேடு திடலில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். ராமதாஸின் சொந்த ஊரான திண்டிவனத்தில் அன்புமணி தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார். மற்ற இடங்களில் நடைபெற்ற நடை பயணத்தைவிட திண்டிவனம் நடை பயணத்திற்கு அவரது ஆதரவாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஒரே நாளில் திண்டிவனத்தில் அன்புமணி நடை பயணம் பொதுக்கூட்டமும் தைலாபுரத்தில் பா.ம.க ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டமும் நடந்ததால் பா.ம.க-வினரிடையே பரபரப்பு நிலவியது.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Pmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: